Tamil Serials TRP Ratings: டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய பாக்கியலட்சுமி..முழு லிஸ்ட் இதோ..!
வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சின்னத்திரை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.

சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கடந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. இதில் பல சீரியல்கள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது.
வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சின்னத்திரை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியல்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் பார்வையாளர்களின் பேவரைட்டான ஒன்றாகவே உள்ளது. இதனை ஒரு கருவியாக கொண்டு சேனல்கள் புது புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்கின்றது.
View this post on Instagram
என்னதான் போட்டி போட்டுக் கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பது என்னவோ சில சீரியல்கள்,நிகழ்ச்சிகள் மட்டும் தான். குறிப்பாக சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இங்கு நடைபெறும் போட்டி என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில் 46வது வாரத்தில் ஒளிபரப்பான சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10.86 புள்ளிகளுடன் கயல் (சன் டிவி) சீரியல் முதலிடமும்,10.85 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் (சன் டிவி) இரண்டாமிடமும், 10.54 புள்ளிகளுடன் சுந்தரி (சன் டிவி) 3 ஆம் இடமும், 9.51 புள்ளிகளுடன் ரோஜா (சன் டிவி) 4வது இடமும், 9.40 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி (விஜய் டிவி) 5 ஆம் இடமும் பிடித்துள்ளது.
View this post on Instagram
இதேபோல வானத்தைப் போல சீரியல் (சன் டிவி) 9.23 புள்ளிகளுடன் 6வது இடமும், 8.60 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாரதி கண்ணம்மா (விஜய் டிவி) 7வது இடமும், 8.49 புள்ளிகளுடன் ஆனந்தராகம் 8வது இடமும், 6.77 புள்ளிகளுடன் செய்திகள் (சன் டிவி) 9வது இடமும், 6.20 புள்ளிகளுடன் ஈரமான ரோஜாவே (விஜய் டிவி) 10வது இடமும் பிடித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

