மேலும் அறிய

Ethirneechal: தொடரும் கொண்டாட்டங்கள்! வெற்றியை நோக்கி பயணிக்கும் எதிர்நீச்சல் டீம்!

Ethirneechal: டி.ஆர்.பி ரேட்டிங்கில் மீண்டும் முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கும் 'எதிர்நீச்சல்' சீரியல் வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது.

சன் டிவியில் சீரியல்கள் என்றாலே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு தனிஈர்ப்பு தான். அதிலும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மவுசு அதிகம். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் 'எதிர்நீச்சல்'.

திருச்செல்வத்தின் 'கோலங்கள்' சீரியல் இன்று வரை சின்னத்திரை  ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து திருச்செல்வம் தற்போது இயக்கி நடித்து வரும் 'எதிர்நீச்சல்' தொடருக்கு ஆரம்பம் முதல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Ethirneechal: தொடரும் கொண்டாட்டங்கள்! வெற்றியை நோக்கி பயணிக்கும் எதிர்நீச்சல் டீம்!

டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையிலும் என்றுமே சன் டிவி சீரியல்கள் தான் முன்னிலை வகித்து வருகின்றன. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் தொடங்கிய நாள் முதல் டி.ஆர்.பி தரவரிசையில் முதலிடத்தை பிடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலில் முன்னணி கதாபாத்திரமான ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு சற்று சரிய துவங்கியது.

எதிர்நீச்சல் சீரியலின் ஆணிவேராக ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இருந்து வந்தது. அதிலும் மாரிமுத்து தனது  அபாரமான நடிப்பால் பெஞ்ச் மார்க் செட் செய்து இருந்தார். அவரின் மறைவுக்குப் பின்னர் அந்த கதாபாத்திரத்தில் எழுத்தாளரும் நடிகருமான நடிகர் வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார். ஆதி குணசேகரனாக நடிகர் மாரிமுத்துவை ஆழமாக பதிய வைத்த ரசிகர்களுக்கு, வேல ராமமூர்த்தியை அந்தக் கதாபாத்திரத்தில் ஏற்று கொள்ள கொஞ்ச காலம் எடுத்துக்கொண்டது. அந்த நேரத்தில் டி.ஆர்.பி ரேட்டிங் சற்று சரிந்து வந்தது. 

Ethirneechal: தொடரும் கொண்டாட்டங்கள்! வெற்றியை நோக்கி பயணிக்கும் எதிர்நீச்சல் டீம்!

ஆனால் தற்போது தம்பிகளின் மனமாற்றம், தர்ஷினியை காணவில்லை என பெண்கள் எடுக்கும் முயற்சி, அடுத்தடுத்து அடி வாங்கும் குணசேகரன், எதிர்நீச்சல் போட்டு தைரியமாக முன்னுக்கு வர முயற்சிகளை எடுத்து வரும் பெண்கள் என கதைக்களம் சூடுபிடித்து மிகவும் சிறப்பாக நாளுக்கு நாள் பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பரபரப்பான கட்டம் ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது. அதனால் எதிர்நீச்சல் டி.ஆர்.பி ரேட்டிங்கும் முன்னிலையை எட்டிப் பிடித்து வருகிறது.  

அதே நேரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'எதிர்நீச்சல்' சீரியல் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த சந்தோஷமான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு லைக்ஸ்களை அள்ளியது. 

Ethirneechal: தொடரும் கொண்டாட்டங்கள்! வெற்றியை நோக்கி பயணிக்கும் எதிர்நீச்சல் டீம்!

மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 'எதிர்நீச்சல்' சீரியலின் இயக்குநர் மற்றும் நடிகர் திருச்செல்வம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாளுக்கு எதிர்நீச்சல் டீம் வாழ்த்துக்களையும் இந்த வாய்ப்பினை கொடுத்தமைக்கு நன்றிகளையும்  தெரிவித்து இருந்தது. திருச்செல்வம் பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாடினார்கள் எதிர்நீச்சல் குழு. கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து கொண்டாட்டங்களை நிகழ்த்தி வரும் எதிர்நீச்சல் டீமுக்கு இணையத்தில் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget