மேலும் அறிய

Ethirneechal : தர்ஷினியின் மாஸ்டர் பிளான்... ஜனனிக்கும் சக்திக்கும் சண்டை: எதிர்நீச்சல் அப்டேட் இதோ

Ethirneechal :தாராவின் பங்க்ஷன் முடிந்ததும் என்ன செய்ய வேண்டும் என தர்ஷினி அம்மாவுக்கு சித்திகளும் பிளான் ஒன்றை சொல்கிறாள். ஜனனி சக்தியிடையே வி.கேவை வைத்து ஏற்படும் சண்டை. இன்றைய எதிர்நீச்சலில்.  

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மே 17 ) எபிசோடில் பத்திரிகை வைத்த இடத்தில் குணசேகரன் பெயர் இல்லாதது பற்றி நந்தினியின் சித்தப்பா கேட்க கோபமான கதிர் எகிறுகிறான். நந்தினி அவர்களிடம் ஏதோ சொல்லி சமாளித்து விட்டு வருகிறாள். ஈஸ்வரியும் தர்ஷினியும் ஆட்டோவில் வந்து இறங்க கதிர் ஆவேசப்பட்டு பேசுவதை பார்த்த ஈஸ்வரி அவனை சமாதானப்படுத்தி புத்தி சொல்கிறாள். அனைவரும் சேர்ந்து மற்றவர்களுக்கு பத்திரிகை வைக்க செல்கிறார்கள்.

Ethirneechal : தர்ஷினியின் மாஸ்டர் பிளான்... ஜனனிக்கும் சக்திக்கும் சண்டை: எதிர்நீச்சல் அப்டேட் இதோ

வீட்டில் குணசேகரன் போனில் பேசி கொண்டு இருக்கிறார். "பத்திரிகையில் என்னுடைய பெயர் இருக்கா? என்னோட பையனுக்கு நான் விசேஷம் வைக்கும் போது வந்து பத்திரிகை வைக்கிறேன் அப்போ நீங்க வந்தா போதும்" என சொல்லிக்கொண்டு இருக்க நந்தினி அவரிடம் இருந்து போனை புடுங்கி "திரு. குணசேகரனுக்கும் இந்த காதுகுத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என சரியான பதிலடி கொடுக்கிறாள்.

Ethirneechal : தர்ஷினியின் மாஸ்டர் பிளான்... ஜனனிக்கும் சக்திக்கும் சண்டை: எதிர்நீச்சல் அப்டேட் இதோ

இந்த புஸ்வானத்தை விடுங்க ஆட்டம் பாம் வருது பாருங்க என சொல்லி தர்ஷினி வருவதை காட்டுகிறான் கரிகாலன். "எங்க போய் சுத்திட்டு வர. என்னுடைய பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்த கூடாது" என தர்ஷினியை அவமானப்படுத்தி குணசேகரன் பேச "நான் மேஜர் என்னை யாரும் தடுக்க முடியாது. நான் நிச்சயம் சாதிப்பேன். நான் சாதிச்சதுக்கு பிறகு என்னுடைய அப்பான்னு நீங்க சொல்லிக்காதீங்க" என தைரியமாக எதிர்த்து பேசுகிறாள். தர்ஷினியின் தைரியத்தை பார்த்து பெண்கள் அனைவரும் சந்தோஷம் அடைகிறார்கள்.

ஈஸ்வரியிடம் மிகவும் வெளிப்படையாக ஜீவானந்தம் பற்றியும் எதிர்காலத்தில் அவளுக்கு ஒரு துணை வேண்டும் என்பதை பற்றியும் தர்ஷினி சொல்கிறாள். இந்த வீட்டில் இருந்து வெளியே போய் சாதிக்கலாம். தாராவின் பங்க்ஷன் முடிந்த பிறகு ஒரு முடிவை எடுக்க வேண்டும் என அனைவரிடத்திலும் கேட்டு கொள்கிறாள் தர்ஷினி. இது தான் நேற்றைய எபிசோட் கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (மே 18) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தர்ஷினி ஈஸ்வரியிடமும் மற்றவர்களிடமும் குணசேகரனிடம் இருந்து தப்பிக்க நான் ஒரு ஐடியா சொல்கிறேன் என்கிறாள். "நீங்க கேஸ் போடுங்க. ஃபர்ஸ்ட் தாராவோட பங்க்ஷன் முடியட்டும்" என சொல்லி வேறு ஏதோ பெரிய பிளான் சொல்கிறாள்.

Ethirneechal : தர்ஷினியின் மாஸ்டர் பிளான்... ஜனனிக்கும் சக்திக்கும் சண்டை: எதிர்நீச்சல் அப்டேட் இதோ

அனைவரும் வீடு வாசலில் ஜனனியின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். ஜனனி வந்ததும் தர்ஷினியை பார்த்து சந்தோஷப்படுகிறாள். அந்த நேரத்தில் கரிகாலன் அங்கே வந்து "நாளைக்கு நடக்கப்போற இந்த மொய்விருந்தை எப்படி வெற்றிகரமா நடத்துறீங்கன்னு பார்க்கலாம்" என சவால் விட கதிரும் ஞானமும் அவனை அடித்து விரட்டுகிறார்கள்.

ஜனனியும் சக்தியும் ஆபீசில் நடந்தது பற்றி பேசி கொள்கிறார்கள். அப்போது ஜனனி வி.கே பற்றி சொல்ல சக்தி கோபமடைகிறான். "அவன்கிட்ட உனக்கு என்ன பேச்சு என கேட்கிறேன்" என சக்தி சொல்ல "என்ன சக்தி பொசஸ்ஸிவ்வா பீல் பண்றீயா? விடு சக்தி" என சொல்லி அவனை அழைக்க இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் நடக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ஜாமினில் வந்த சந்திரகலா.. சாமுண்டீஸ்வரியை பழிவாங்க தீ்க்குளிப்பு நாடகம்!
Karthigai Deepam: ஜாமினில் வந்த சந்திரகலா.. சாமுண்டீஸ்வரியை பழிவாங்க தீ்க்குளிப்பு நாடகம்!
Parijatham Serial: கண்ணாமூச்சி ஆடிய காதலன்.. வர்ஷினியை கொல்ல முயற்சித்த ஸ்ரீஜா அப்பா
Parijatham Serial: கண்ணாமூச்சி ஆடிய காதலன்.. வர்ஷினியை கொல்ல முயற்சித்த ஸ்ரீஜா அப்பா
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொத்தாக சிக்கிய சிவனாண்டி கேங்.. கார்த்திக் ப்ளானை மோப்பம் பிடித்த முத்துவேல் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொத்தாக சிக்கிய சிவனாண்டி கேங்.. கார்த்திக் ப்ளானை மோப்பம் பிடித்த முத்துவேல் - கார்த்திகை தீபத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
Embed widget