மேலும் அறிய

Ethirneechal : ஒட்டுக்கேட்க ரெடியான ஜான்சி... குழப்பத்தில் இருக்கும் கதிரின் அடுத்த பிளான் என்ன? 

Ethirneechal Oct 18 : ஜான்சி ராணி ஈஸ்வரியை பற்றி தப்பாக பேச அவளை அடிக்க எகிறி கொண்டு போகிறான் தர்ஷன். ஜனனியின் நிலை புரியாமல் அனைவரும் பாராட்டி தள்ளுகிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 18) எபிசோடில் விசாலாட்சி அம்மா பேர பிள்ளைகளிடம் வந்து என்ன "பெரியவங்கனு மரியாதையே இல்லாம பேசுறீங்களாம்" என கேட்கிறார். "அவங்க ஒன்னும் தப்பா பேசலை. என்னோட நிலைமை அவ்வளவு மோசமா இருக்கு அதுதான் பேசுறாங்க" என்கிறாள் ஆதிரை. 

Ethirneechal : ஒட்டுக்கேட்க ரெடியான ஜான்சி... குழப்பத்தில் இருக்கும் கதிரின் அடுத்த பிளான் என்ன? 
"ஓடிப்போக சொல்லி ஐடியா குடுக்குதுங்க இதுங்க.  இந்தா இதை பாரு மைதா மாவு பொம்மையாட்டம் இருக்கு அது என்ன ரகம் என்றே தெரியல. இவங்க அம்மா இதுகல யாரை நினைச்சு பெத்தாலோ தெரியல எதுவுமே எங்க அண்ணன் கலை போல இல்லவே இல்லை" என அநாகரீகமாக ஈஸ்வரியை பற்றி பேச எகிறி கொண்டு அவளை அடிக்க போகிறான் தர்ஷன்.  

"எங்க அம்மாவை பத்தி எப்படி இவ தப்பா பேசலாம். இவ எல்லாம் ஒரு பொம்பளையா?. மரியாதையா இங்க இருந்து போயிடு" என ஜான்சியை மிரட்டுகிறான் தர்ஷன். ரேணுகாவும் நந்தினியும் ஜான்சியை திட்டுகிறார்கள். "வயசு பையன் கையாள அடி வாங்கி அசிங்கப்பட்டு போகாத" என சொல்கிறார்கள் நந்தினி. 

Ethirneechal : ஒட்டுக்கேட்க ரெடியான ஜான்சி... குழப்பத்தில் இருக்கும் கதிரின் அடுத்த பிளான் என்ன? 

"இந்த வீட்ல இவங்க இருக்குறது எனக்கு பிடிக்கல" என்கிறாள் தாரா. "பிடிக்கலைன்னா வீட்டை விட்டு ஒடுங்கடி" என்கிறார் விசாலாட்சி அம்மா. "நாங்க எதுக்கு போகணும்? இது எங்க வீடு அவங்கள வேணா போக சொல்லுங்க" என்கிறாள் தாரா. "உங்க பெரியப்பா வரட்டும் எல்லாருக்கும் ஒரு முடிவு கட்டுவான்" என்கிறார் விசாலாட்சி அம்மா. "ஆதிரை இந்த திருவிழாவுக்கு ஊர் பெரியவங்க எல்லாரும் வருவாங்க. அவங்க எல்லார் முன்னாடியும் வச்சு உனக்கு மறு தாலி காட்ட வைச்சுடலாம். அதுக்கு அப்புறம் உன்னோட குடும்பத்தை ஒழுங்கா நடத்து" என்கிறார் விசாலாட்சி அம்மா. 

ஜனனியும் சக்தியும் வீட்டுக்கு வருகிறார்கள். ஜனனி மிகவும் கவலையாக இருக்கிறாள். "கிருஷ்ணன் எல்லாமே பிளான் பண்ணி தான் செய்து இருக்கிறான். ஒன்பது யூனிட்டை ஏற்கனவே வாங்கிவிட்டேன். நேரம் பார்த்து இந்த யூனிட்டையும் கைப்பற்றிவிட்டான். அவனை எதிர்க்க வேண்டும் என்றால் அவனுடைய பேக் கிரவுண்ட் விசாரித்த பிறகு தான் பிளான் செய்யணும். நான் என்னோட சவாலில் ஜெயிக்கணும்" என்கிறாள் ஜனனி.

இவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டதை பார்த்த அனைவரும் வந்து ஜனனியை ஆஹா ஓஹோ என பாராட்டுகிறார்கள். சீக்கிரமாக பேக்டரி திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த சொல்லி சொல்கிறார்கள். நடந்த விஷயம் எதையும் அவர்களிடம்  சொல்ல வேண்டாம் என சக்தியிடம் சொல்லிவிடுகிறாள் ஜனனி. 

Ethirneechal : ஒட்டுக்கேட்க ரெடியான ஜான்சி... குழப்பத்தில் இருக்கும் கதிரின் அடுத்த பிளான் என்ன? 

கதிர் வீட்டுக்கு வந்து விடுகிறான். ஞானம், கரிகாலன் என மூவரும் ஒன்றாக உட்கார்ந்து இருக்கும் போது ஜான்சி ராணி வீட்டில் நடந்த விஷயங்களை பற்ற வைக்கிறாள். ஈஸ்வரி வெளியில் போன விஷயம் பற்றியும் ஜனனியும் சக்தியும் வெளியில் சென்று பின்னர் வீடு திரும்பும் போது முகத்தை தொங்கபோட்டுக்கிட்டு வந்தது பற்றியும் சொல்கிறாள். மற்றவர்கள் அனைவரும் மாடியில் ஏதோ மீட்டிங் நடத்தி கொண்டு இருக்கிறார்கள் என்கிறாள் ஜான்சி ராணி. 

கதிர் அமைதியாக இருக்க ஞானம் என்ன நடந்தது என அவனிடம் கேட்கிறான். வீட்டுக்குள் பேசினால் சரிப்படாது வெளியில் போய் பேசலாம் என வாசலுக்கு அழைத்து செல்கிறான் கரிகாலன். அங்கேயும் சென்று கதிர் அமைதியாகவே இருக்கிறான். அக்கம் பக்கம் எல்லாம் சுற்றி பார்த்து கொள்கிறான். இவர்கள் மூவரும் என்ன பேச போகிறார்கள் என்பதை ஒட்டுக்கேட்பதற்காக தயாராக இருக்கிறாள் ஜான்சி ராணி. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Embed widget