மேலும் அறிய

Ethirneechal: மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தர்ஷினி, ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! எதிர்நீச்சலில் பரபரப்பு!

Ethirneechal: மன உளைச்சலில் வீடு திரும்பிய தர்ஷினியை மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்று விட்டது. இந்தத் தகவல் அறிந்த குணசேகரன் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி. எதிர்நீச்சலில் பரபரப்பான கட்டம்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal)தொடரில் கடந்த வாரத்தில் நாச்சியப்பனின் குடும்பத்தார் பார்வதியை அவர்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்து தாலியை கழட்டிக் கொடுத்து அந்த குடும்பத்திற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சத்தியம் செய்யச் சொல்லுமாறு சொல்கிறார்கள். பார்வதியும் ஜனனியுடன் கோயிலுக்கு வந்து தாலியை நாச்சியப்பனிடம் கழட்டிக் கொடுத்துவிட்டு, அவரை நாலு வார்த்தை கேட்டு அசிங்கப்படுத்துகிறார். 

ஜனனி அவர்கள் அனைவரையும் பார்த்து "ஒரு நாள் இந்தப் பொண்ணு எங்களோட சொந்த ரத்தம்னு சொல்லுவீங்க" என சவால் விட, நாச்சியப்பன் குடும்பத்தார் ஜனனியை அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார்கள். வசுவுடன் வந்த ஜனனியின் தங்கை அவள் ஒருவரை காதலிப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்க, பார்வதி அவளிடம் "இந்தக் காதல் எல்லாம் உனக்கு வேண்டாம். நல்லா படிச்சு வேலைக்கு போ. இந்த காதலால தான் என்னோட வாழ்க்கையே போயிடுச்சு" என சொல்லி வருத்தப்படுகிறார். ஆனால் ஜனனியின் தங்கையோ காதல் மீது உறுதியாக இருக்கிறாள். பார்வதி அனைத்து முடிவையும் ஜனனியிடம் கொடுக்கிறார்.

Ethirneechal: மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தர்ஷினி, ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! எதிர்நீச்சலில் பரபரப்பு!

கரிகாலன் தர்ஷினி ஜூடோ பயிற்சி மேற்கொள்வதைப் பற்றி குணசேகரனிடம் போட்டு கொடுக்க, அவரோ கோச்சுக்கு போன் செய்து அவரை கண்டபடி திட்டி விடுகிறார். இனிமேல் தர்ஷினி ஜூடோ பயிற்சிக்கு வரமாட்டாள் என்பதை சொல்லிவிடுகிறார். 

இதனால் மிகுந்த மனவருத்தத்துடன் பள்ளிக்குச் சென்ற தர்ஷினி, கோச்சிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர் தர்ஷினிக்கு இனி பயிற்சி கொடுக்க முடியாது என மறுத்துவிடுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் தர்ஷினி நடந்து வந்து கொண்டு இருக்கும் போது ஏதோ ஒரு கும்பல் வந்து தர்ஷினியை காரில் கடத்தி சென்று விடுகிறது. 

Ethirneechal: மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தர்ஷினி, ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! எதிர்நீச்சலில் பரபரப்பு!

ஈஸ்வரி தர்ஷினிக்கு போன் செய்து பார்க்க யாரோ ஒருவர் போனை எடுத்துப் பேச, ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். கீழே கிடந்த போனை எடுத்து அவர் பேசியதாகச் சொல்ல, ஈஸ்வரிக்கு மேலும் அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த இடத்திற்கு ஈஸ்வரி, ஜனனி மற்றும் சக்தி செல்ல, அங்கே தர்ஷினியின் ஸ்கூல் பேக் கிடப்பதைப் பார்த்து கதறி அழுகிறாள் ஈஸ்வரி. அவளை ஜனனியும் சக்தியும் சேர்ந்து சமாதானம் செய்கிறார்கள். தர்ஷினி காணாமல் போன விஷயத்தை ரேணுகா குணசேகரனிடம் சொல்ல, அவரும் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் ஆளுக்கு ஒரு பக்கம் போய் தர்ஷினியை தேடுகிறார்கள். 

Ethirneechal: மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தர்ஷினி, ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! எதிர்நீச்சலில் பரபரப்பு!

மறுபக்கம் மெய்யப்பன் குடும்பத்தில், ஆத்தா நாலு பேரின் திருமணத்தையும் ஒரே மேடையில் வைத்து செய்து விடுவது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த நால்வர் யார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 

தர்ஷினியின் கடத்தலுக்கு காரணம் குணசேகரனாக இருக்குமோ அல்லது ஜான்சி ராணி கரிகாலனின் வேலையா என்பது ஒரே சஸ்பென்சாக இருக்கிறது. எனவே இந்த கடத்தல் ட்ராமாவுக்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் எதிர்நீச்சல் தீவிர ரசிகர்கள்!  

தலைப்பு செய்திகள்

Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget