மேலும் அறிய

Ethirneechal 2: எதிர்நீச்சல் ரசிகர்களே.. ஜனனி உங்களுக்கு ஒரு ஷாக் கொடுத்திருக்காங்க..

ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடரின் கதாநாயகி ஜனனி( மதுமிதா ) அந்த சீரியலின் இரண்டாவது பாகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சிக்கு என்று பல ஆண்டுகளாக குறிப்பிட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்து கொண்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எவர்கிரீன் சீரியல்களே காரணம் ஆகும். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் சன் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொடராக திகழ்ந்தது எதிர்நீச்சல் சீரியல்.

எதிர்நீச்சல் தொடர்:

இந்த சீரியலின் ஆதி குணசேகரனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இவரும், இவருடைய தம்பிகளும் தங்களது மனைவிகளை எப்படி அடிமையாக வைத்துள்ளனர்? அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள்? என்பதே இதன் மையக்கரு ஆகும்.

முழு வேகத்தில் விறுவிறுப்பாக சென்ற இந்த தொடர் மாரிமுத்து திடீரென மாரடைப்பால் உயிரிழந்த பிறகு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை இழந்தது. பின்னர், இந்த தொடரை அவசரம் அவசரமாக முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர். இந்த சூழலில், எதிர்நீச்சல் தொடரின் இரண்டாவது பாகம் வருவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஜனனி தந்த ஷாக்:

இந்த இன்பமான செய்திக்கு மகிழ்ச்சி அடைவதற்குள் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி செய்தி ஒன்று வந்துள்ளது. எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனுக்கு எதிராக அந்த வீட்டு மருமகள்களுக்கு உந்துசக்தியாக இருந்த ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் நடிக்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Madhumitha H (@madhumitha.h_official)

சில தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், புதிய சகாப்தம் தொடங்குகிறது. அன்புள்ள ரசிகர்களே எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் நான் சில காரணங்களால் நீடிக்கப்போவதில்லை என்று தெரிவிக்கிறேன். உங்களது எல்லையில்லா அன்பிற்கு ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

உங்கள் அன்பு மற்றும் காதல் எனக்கு பெருமை கொடுத்தது. இதுவரைக்கும் துணையாகவும், இன்று நாளிலும் என்னை தொடர்ந்து போகும் என்று பதிவிட்டுள்ளார். எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மதுமிதாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் பிறந்த நடிகை மதுமிதா கன்னடத்தில் ஏராளமான தொடர்களில் நடித்த பிறகு தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியாத வரம் வேண்டும் என்ற தொடரில் நடித்தார். பின்னர், 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

எதிர்நீச்சல் தொடர் 2ம் பாகத்தில் யார்? யார்? நடிக்க இருக்கிறார்கள் என்ற அறிவிப்பை இயக்குனர் திருச்செல்வன் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget