மேலும் அறிய

EthirNeechal: நந்தினி செய்த காரியம்... சிக்கலில் குணசேகரன்.. இதுவரை எதிர்நீச்சல் சீரியலில் நடந்தது என்ன?

Ethir neechal :*குணசேகரனை மாட்டிவிடுவேன் என மிரட்டிய வளவன்* ஹனிமூனுக்கு தாயார்கும் கரிகாலன் ஆதிரை * வெண்பாவை பார்த்ததும் துக்கத்தை அடக்க முடியாத நந்தினிஎதிர் நீச்சல் நேற்றைய எபிசோடில்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில்  குணசேகரன் வீட்டுக்கு கிள்ளிவளவன் வந்து "ஜீவானந்தம் இங்க எங்கேயோ தான் சுத்திகிட்டு இருக்கான்னு கேள்விப்பட்டேன். ஏன் அவனை அரைகுறையா விடணும் அது தான் முழுசா முடிச்சிடலாம் என சொல்ல வந்தேன்" என்கிறார். கதிர் நக்கலாக "ஆமாமா அப்படியே போய் பக்கத்து வீட்டுகாரனை சுடு" என்கிறான். வளவன் கதிரிடம் எகிறி கொண்டு போகிறான். குணசேகரன் தான் தடுத்து விடுகிறார்.

"உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை நான் செட்டில் செய்து விடுவேன். நீங்க சென்னைக்கு கிளம்புங்க" என குணசேகரன் சொல்கிறார். "இங்க பாரு குணசேகரா எது நடந்தாலும் நாம எல்லாரும் சேர்ந்து தான் அனுபவிக்கனும். என்னை மட்டும் மாட்டிவிட நினைச்சா நான் எல்லாத்தையும் எங்க சொல்லணுமோ அங்க சொல்லிட்டு எஸ்கேப்பாகி போய்கிட்டே இருப்பேன்" என மிரட்டிவிட்டு செல்கிறார் கிள்ளிவளவன்.

EthirNeechal: நந்தினி செய்த காரியம்... சிக்கலில் குணசேகரன்.. இதுவரை எதிர்நீச்சல் சீரியலில் நடந்தது என்ன?

ஜனனியும் மற்றவர்களும் ஜீவானந்தம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டனர். இப்படி தான் போக வேண்டும் என பேசி கொண்டு இருக்க "அங்க ஒரு சின்ன பிள்ளை இருக்கு எப்படி கைவீசிக்கிட்டு போறது. ஏதாவது வாங்கிட்டு போகலாம்" என முடிவு செய்கிறார்கள். ரேணுகாவும், நந்தினியும் சென்று பிஸ்கெட் வாங்க கடைக்கு செல்கிறார்கள்.

ஈஸ்வரியும் ஜனனியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் "எதுவும் அறியாத அந்த குழந்தை கஷ்டப்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு பாவத்தை செய்தவர்கள் நாலு செவுத்துக்குள் தைரியமாக உட்கார்ந்து கொண்டு மற்றவர்களை அதிகாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்" என ஈஸ்வரி சொல்கிறாள்.

EthirNeechal: நந்தினி செய்த காரியம்... சிக்கலில் குணசேகரன்.. இதுவரை எதிர்நீச்சல் சீரியலில் நடந்தது என்ன?

குணசேகரன் வீட்டுக்கு கரிகாலனுடன் ஜான்சி ராணி வீராப்பாக வருகிறாள். "வெளியில இருந்து பார்க்க நல்லா இருக்கு உள்ள வந்து பார்த்த தானே ச்சீ என இருக்கு. எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். இந்த மகாராணி என்னோட பையன் கூட வீட்டுக்கு வந்து வாழ போறாளா இல்லையா?" என மறுபடியும் அதே பழைய பிரச்சினையை ஆரம்பிக்கிறாள். ஆதிரையும் எந்த ஒரு மாற்றமும் இன்றி என்னால் வர முடியாது என கண்டிஷனாக சொல்கிறாள்.

"அப்போ சரி என்னோட உறவுக்காரங்கள   கூட்டிட்டு வந்து நடுவீட்ல வைச்சு பஞ்சாயத்து செய்து முடிவெடுக்கலாம். இது வரைக்கும் அமைதியா போயிட்டேன். என்னோட ஆட்டத்தை இனிமே தான் நீங்க பார்க்க போறீங்க. ஒன்னு வந்து வாழ சொல்லுங்க இல்லனா அத்துவிட்டுடுங்க. ஆனால் அத்துவிட்டா சேதாரம் கொஞ்சம் அதிகமா இருக்கும்" என ஜான்சி ராணி எகிறுகிறாள்.

"அதெல்லாம் அத்துவிட வேண்டாம் இவங்க ரெண்டு போரையும் மலைப்பிரதேசத்துக்கு ஹனிமூன் அனுப்பி வைக்குறேன். இரண்டு பெரும் வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும்" என குணசேகரன் சொல்கிறார். அதை கேட்டு ஜான்சி ராணி "சரி இந்த முறை நீ சொல்றதை நம்பி நான் போறேன்" என சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

EthirNeechal: நந்தினி செய்த காரியம்... சிக்கலில் குணசேகரன்.. இதுவரை எதிர்நீச்சல் சீரியலில் நடந்தது என்ன?

ஜீவானந்தம் வீட்டுக்கு வந்து இறங்குகிறார்கள் ஜனனி, நந்தினி, ஈஸ்வரி மற்றும் ரேணுகா.

"வாசலிலேயே நின்னுட்டு இருந்தா எப்படி அப்பத்தாவை பார்க்கணும் இல்ல வாங்க உள்ள போகலாம்" என ஜனனி மூவரையும் அழைத்து செல்கிறாள். வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டு அப்பத்தாவை அழைக்கிறாள் ஜனனி. சத்தம் கேட்டு வெண்பா மெதுவாக எட்டி பார்க்கிறாள். ஜனனி மற்றவர்களிடம் அவள் தான் வெண்பா என சொல்கிறாள்.

EthirNeechal: நந்தினி செய்த காரியம்... சிக்கலில் குணசேகரன்.. இதுவரை எதிர்நீச்சல் சீரியலில் நடந்தது என்ன?

வெண்பா சிரித்து கொண்டே ஓடி வந்து ஜனனிக்கு தேங்க்ஸ் சொல்கிறாள். ஏன் என ஜனனி கேட்டதும் "எங்க அம்மா இறந்த அன்னைக்கு எங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தீங்க. நான் தேங்க்ஸ் சொல்ல மறந்துட்டேன்" என சொன்னதும் நந்தினி துக்கம் தாங்காமல் வெண்பாவை கட்டிக்கொண்டு அழுகிறாள். ஜீவானந்தம் வெளியில் வந்து எட்டிப் பார்க்கிறார். அத்துடன் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
Embed widget