மேலும் அறிய

Siragadikka Aasai: மனோஜுக்கு பிசினஸ் ஐடியா கொடுத்த முத்து! அவமானப்படுத்திய ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்

Siragadikka Aasai Today Episode : மனோஜுக்கு நல்ல பிசினஸ் ஐடியாவுடன் சந்தோஷமாக வீட்டுக்கு வரும் முத்து. ஐடியா கொடுத்த முத்துவையே அவமானப்படுத்தி ஒதுக்கிய ரோகிணி. இன்றைய சிறகடிக்க ஆசை கதைக்களம் என்ன?

விஜய் டிவியில் திங்கள் முதல் சனி இரவு வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியலின் இன்றைய (மே 13) எபிசோடில் முத்து குடித்து விட்டு வரவில்லை என்பதை மீனா நம்பவில்லை. ஊதி காட்ட சொன்னதும் தான் மீனா நம்புகிறாள். "குடிக்காமலே பெரிய பிரச்சினை ஆயிடுச்சு அது தான் எதுக்கு என இன்னைக்கு குடிக்கல" என முத்து சொல்ல மீனா சந்தோஷப்படுகிறாள்.

சிறகடிக்க ஆசை:

அடுத்த நாள் காலை முத்து ஒரு அவசர சவாரிக்காக செல்ல அவனுடைய காரில் வந்த கஸ்டமர் ஒரு ஷோரூம் உரிமையாளர். அவரை இறக்கிவிட்டதும் ரவுடிகள் சில பேர் அந்த கஸ்டமரை கடையை கம்மி விலைக்கு எழுதி கொடுக்க சொல்லி மிரட்டுகிறார்கள். அந்த ரவுடிகளை முத்து அடித்து விரட்டிவிடுகிறான். முத்துவை உள்ளே அழைத்து செல்கிறார் அந்த கஸ்டமர். 

Siragadikka Aasai: மனோஜுக்கு பிசினஸ் ஐடியா கொடுத்த முத்து! அவமானப்படுத்திய ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்

முத்துவுக்கு மீனா ஆதரவு:

கடையை உழைக்க வேண்டும் என துடிப்பவர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு வெளிநாட்டில் இருக்கும் மகன்களுடன் போய் செட்டிலாக போவதாக சொல்கிறார். அதை கேட்டதும் முத்துவுக்கு மனோஜ் ஞாபகம் வந்து என்ன விலைக்கு கொடுக்க போகிறார் என விசாரிக்கிறான். முத்து தனக்கு உதவியதால் முன்ன பின்ன இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என அந்த கடையின் உரிமையாளர் சொல்கிறார். வீட்டில் கலந்து பேசிவிட்டு வருகிறேன் என முத்து சந்தோஷமாக செல்கிறான்.

விஜயா மனோஜ் ரோகிணியை சாப்பிட அழைக்கிறார். மனோஜ் தலைவலியுடன் வர ரவியும் தனக்கும் தலைவலிக்கிறது என சொல்கிறான். ஆனால் என்ன காரணம் என சொல்லாமல் மழுப்புகிறார்கள். அந்த நேரத்தில் சந்தோஷமாக முத்து வீட்டுக்கு ஓடி வந்து அனைவரிடம் மனோஜ் விஷயமாக விசாரித்ததை பற்றி சொல்கிறான். ஹோம் அப்ளையன்சஸ் ஷோரூம் என முத்து சொல்ல அனைவரும் அதை கேட்டு சந்தோஷப்படுகிறாள். மனோஜ் உட்கார்ந்த இடத்தில் வேலை என்பதால் யோசிக்கிறான். "என்னைக்குமே இவன் மனோஜுக்கு நல்லது செய்யணும் என நினைக்க மாட்டான்" என விஜயா முத்துவை அவமானப்படுத்தி பேச மீனா முத்துவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள்.
 
முத்துவை ஒதுக்கும் ரோகிணி:

ரவி, ஸ்ருதி, மனோஜ் என அனைவருமே இது நல்ல யோசனையாக இருக்கிறது என சொல்ல ரோகிணி முதலில் போய் கடையை பார்த்துவிட்டு வரலாம் அதற்கு பிறகு யோசிக்கலாம் என சொல்கிறாள். மீனா முத்துவை அழைத்து "உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை. அத்தை உங்களை எப்படி அசிங்கப்படுத்தி பேசுறாங்க பாருங்க" என மீனா சொல்ல "என்ன தான் இருந்தாலும் மனோஜ் என்னோட அண்ணன். அவன் படிச்சு தான் இருக்கானே தவிர அவனுக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது. பணத்தை எங்கயும் கொண்டு போய் ஏமாந்து விட கூடாது. இதிலாவது அவன் உருப்பட்டு அப்பாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தால் போதும். யார் என்ன சொன்னாலும் நான் செய்வதை செய்து கொண்டே தான் இருப்பேன் "

அனைவரும் சேர்ந்து அந்த ஷோரூம் பார்க்க செல்கிறார்கள். கடையை  பார்த்ததுமே அனைவருக்கும் சந்தோஷமாக இருக்கிறது. உள்ளே சென்று உரிமையாளரிடம் பேசிவிட்டு கடையை சுற்றி பார்க்கிறார்கள். உரிமையாளர் கடையை பற்றியும் என்ன செய்ய வேண்டும் என்பதையும்  பற்றியும் சொல்கிறார். மற்ற விஷயங்களை பேச செல்லும் போது ரோகிணி "நாங்க பேசிக்கறோம்" என சொல்லி முத்துவை ஒதுக்கிவிடுகிறாள். அது முத்துவுக்கும் மீனாவுக்கு மனவேதனையாக இருக்கிறது. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) எபிசோட் கதைக்களம்.

தலைப்பு செய்திகள்

Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget