Siragadikka Aasai serial July 8 : என்ன முத்து இப்படி பண்ணிட்டீங்களே! பாட்டிக்கு காத்திருந்த சர்ப்ரைஸ் - சிறகடிக்க ஆசையில் இன்று
Siragadikka Aasai Today :முத்து பாடிக்காக அவருடைய பள்ளி தோழிகளை கண்டுபிடித்து அழைத்து வந்து சர்ப்ரைஸ் செய்து விடுகிறான். பாட்டிக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
Siragadikka Aasai serial July 8 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ், ரவி, ஸ்ருதி, விஜயா, மீனாவின் அம்மா, ஸ்ருதியின் அம்மா என அனைவரும் பாட்டிக்கு அவர்களின் பரிசுகளை கொடுக்கிறார்கள்.
"மனோஜ் : அது தான் எல்லாரும் பரிசு கொடுத்தாச்சு இல்ல. இப்போ சொல்லுங்க யாருக்கு நீங்க அந்த சர்ப்ரைஸ் பரிசு கொடுக்க போறீங்க?
பாட்டி : இன்னும் என்னோட பேரன் முத்து வரலயே. அவனும் வந்துரட்டும்" என்கிறார்.
"மனோஜ் : அவன் வரமாட்டான் பாட்டி. நாலு காலுல தான் வருவான்" என மனோஜ் சொல்ல அப்போது வீட்டுக்கு என்ட்ரி கொடுக்கிறான் முத்து.
பாட்டி முத்துவை அழைத்து "எங்கடா போன?" என செல்லமாக அடிக்கிறார்.
"மனோஜ் : நாங்க எல்லாரும் பாட்டிக்கு பரிசு கொடுத்தாச்சு? நீ என்ன கொடுக்க போற ?
முத்து : நான் எதுவும் வாங்கிட்டு வரலயே. ஆனா கூட்டிட்டு வந்து இருக்கேன்" என சொல்லி சில பேரை அழைத்து வருகிறான்.
அவர்கள் அனைவரும் பாட்டியின் பள்ளியில் உடன் படித்த நெருங்கிய தோழிகள். அவர்களை பார்த்ததும் நாச்சியார் பாட்டிக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பழைய நினைவுகளை பற்றி எல்லாம் பேசி சந்தோஷப்படுகிறார்கள். அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்.
"மீனா : நீங்க சரியான ஆள் தான். என்கிட்டே கூட நீங்க சொல்லல இல்ல. அவ்வளவு தான் என் மேல உங்களுக்கு இருக்க நம்பிக்கை.
முத்து : அப்படி இல்ல மீனா. எங்க நான் உன்கிட்ட நான் சொன்ன நீ பாட்டி மேல இருக்க பாசத்துல அவங்க கிட்ட சொல்லிட்டா அதனால் தான். இப்போ பாரு பாட்டி எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க" என பேசி கொள்கிறார்கள்.
மனோஜுக்கு எங்கே பாட்டியின் பரிசு முத்துவுக்கு போய் விடுமோ என பயப்படுகிறான். முத்து மட்டும் தான் கொடுத்தார். மீனா எதுவும் கொடுக்கலேயே அதனால இந்த பரிசு அவங்களுக்கு கிடையாது என ரோகிணி சொல்கிறாள்.
"மீனா : நானும் பாட்டிக்காக ஒன்னு பண்ணி இருக்கேன். பாட்டியோட வாழ்க்கை அனுபவத்தை பத்தி அவங்களை பேச சொல்லி வீடியோ எடுத்து இருக்கேன். ஆனா அதை பாட்டிக்கு அப்புறம் காட்டலாம்.
முத்து : நீ ஆசைப்பட்டு ஒன்னு பண்ணி இருக்க. அது இப்போவே காட்டலாம்" என சொல்லி டிவியில் அந்த வீடியோவை போடுகிறான் முத்து.
வாழ்க்கையை எப்படி மனநிறைவோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என அறிவுரை சொல்கிறார். அதை பார்த்த அனைவருக்கும் சந்தோஷமாக இருக்கிறது. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.