மேலும் அறிய

Siragadikka Aasai serial August 28 : டிராமா போட்டு ஏமாத்திய ரோகிணியின் அடுத்த பிளான் என்ன? சிறகடிக்க ஆசை இன்று 

Siragadikka Aasai serial Today : வீட்டில் உள்ள அனைவரையும் டிராமா போட்டு ரோகிணி ஏமாத்தினாலும் முத்துவும் மீனாவும் அவளை நம்ம தயாராக இல்லை. அதை தெரிந்து கொண்ட ரோகிணியின் அடுத்த பிளான் என்ன?

Siragadikka Aasai serial August 28 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி அழுது டிராமா பண்ணி "அப்பா ஜெயிலுக்கு போன கவலையை நினச்சு நினச்சு தான் எனக்கு அபார்ஷன் ஆயிடுச்சு. உங்க கிட்ட சொன்னா நீங்க உடைஞ்சு போயிடுவீங்கன்னு தான் சொல்லல. தயவு செய்து என்னை சந்தேகப்படாதீங்க ஆண்ட்டி " என பலமாக நடிக்க அதை கேட்டு விஜயாவும் வருத்தத்தில் ரோகிணிக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்கிறாள்.

Siragadikka Aasai serial August 28 : டிராமா போட்டு ஏமாத்திய ரோகிணியின் அடுத்த பிளான் என்ன? சிறகடிக்க ஆசை இன்று 

இப்படி ஒரு விஷயத்தை யார் சொன்னது என ஒருவர் மாற்றி ஒருவர் சொல்ல போக பழி அனைத்தும் மீனா மேல் தான் வந்து விழுகிறது.  ரோகிணி மீனாவை திட்டி தீர்க்க "என்னோட விஷயத்தில் நீங்க இனிமேல் தலையிடாதீங்க. உங்களுக்கு அசிங்கமா இல்ல" என மீனாவை அவமானப்படுத்தி ரோகிணி பேசுகிறாள். "முத்து : மீனா ஒன்னும் இல்லாததை சொல்லலியே. நீ மறைச்ச விஷயத்தை சொன்னா அவ்வளவு தானே" என மீனாவுக்கு ஆதரவாக பேசுகிறான். 

"விஜயா : உனக்கு எப்படி இது தெரியும். யாரவது சொன்னாங்களா?

மீனா :  சீதா ஹாஸ்பிடலுக்கு போன இடத்துல ரோகிணி வந்ததால என்ன ஆச்சுன்னு விசாரிச்ச போது தான் தெரிந்தது. 

மனோஜ் : அப்போ நீ ரோகிணியை வாட்ச் பண்ணிகிட்டே இருக்க" என மூவரும் மாறி மாறி மீனாவை கார்னர் செய்ய "கூட்டு குடும்பம்னா அப்படி தான் இருக்கும். ஒருத்தருக்கு ஒரு விஷயம் தெரிஞ்சா அது எல்லாருக்கும் தான் தெரிய வரும். இத்தோட இதை பத்தி பேசுறதை நிறுத்திட்டு அவங்கவங்க வேலையை போய் பாருங்க" என்கிறார் அண்ணாமலை.

மீனா வருத்தத்தில் அழுது கொண்டே இருக்க முத்து அவளை சமாதானம் செய்கிறான். 

"முத்து : அவங்க என்னமோ பண்ணிட்டு போகட்டும். நமக்கு என்ன

மீனா : இந்த வீட்ல என்ன பிரச்சினை நடந்தாலும் கடைசியில் நான் தான் மாட்டிக்குறேன். எனக்கு இன்னும் கூட அவங்க சொன்னதுல நம்பிக்கை இல்லை. சரியா சொல்ல தெரியல 

முத்து : விடு மீனா. அந்த ஓடுகாளியும் இந்த பார்லர் அம்மாவும் சேர்ந்து இன்னும் என்ன என்ன எல்லாம் மறைச்சுவைச்சு இருக்காங்கனு தெரியல " என சொல்ல வெளியில் நின்ற ரோகிணி அதை கேட்டு விடுகிறாள்.

Siragadikka Aasai serial August 28 : டிராமா போட்டு ஏமாத்திய ரோகிணியின் அடுத்த பிளான் என்ன? சிறகடிக்க ஆசை இன்று 

உடனே பிளான் பண்ணி விஜயாவிடம் போய் "இந்த வீட்ல என்னால நிம்மதியா இருக்கவே முடியல. ப்ரைவசியே இல்ல. நானும் மனோஜும் தனியா போயிடுறோம்" என சொல்ல அதை கேட்டு ஷாக்கான விஜயா "இந்த பூக்காரிக்காக எல்லாம் நீ ஏன் மா வீட்டை விட்டு போகணும். அவளை தான் இந்த வீட்டை விட்டு அனுப்பனும். நீ எதை பத்தியும் கவலை படாமல் போய் ரெஸ்ட் எடு. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்" என ரோகிணியை சமாதானம் செய்கிறாள் விஜயா. 

மனோஜிடம் ரோகிணி மன்னிப்பு கேட்கிறாள்.

"ரோகிணி : உனக்கு வேலை இல்லனு டென்ஷன்ல இருந்த அதனால தான் சொல்லலை. இந்த வீட்டை விட்டு நாம போயிடலாம். ஏதாவது ஒரு பிரச்சினை பண்ணி டென்ஷன் பண்ணிகிட்டே இருக்காங்க. 

Siragadikka Aasai serial August 28 : டிராமா போட்டு ஏமாத்திய ரோகிணியின் அடுத்த பிளான் என்ன? சிறகடிக்க ஆசை இன்று 

மனோஜ் : அம்மா இல்லாமல் என்னால் இருக்க முடியாது. அம்மாவலையும் என்னை விட்டு இருக்க முடியாது. அந்த முத்துவெல்லாம் ஒரு ஆளுன்னு வீட்டைவிட்டு போகணும்னு சொல்ற. 

குழந்தை உண்டானது எனக்கு சந்தோஷம் தான். அது இப்போ இல்லாம போயிருச்சு அது பரவாயில்லை.  இப்போ நம்ம இரண்டு பேருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரிந்து விட்டது. சீக்கிரமே நமக்கே ஒரு குழந்தை பிறக்கும்" என சொல்லிவிட்டு குழந்தை பிறந்து இருந்தா எப்படி இருக்கும் என அதை பற்றியே பேச ரோகிணி மனோஜை கட்டிக்கொண்டு "உன்னை நான் நிறைய ஏமாத்திட்டேன். உன்கிட்ட நிறைய பொய் சொல்லிட்டேன். எல்லாம் உன் கூட இருப்பதற்காக தான். என்னை மன்னிச்சுடு மனோஜ்" என்கிறாள் ரோகிணி. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Embed widget