மேலும் அறிய

Sandhya Ragam: கொளுத்திப் போட்ட புவனேஸ்வரி.. ட்விஸ்ட் கொடுத்த ரகுராம்.. சந்தியா ராகம் இன்று! 

சந்தியா ராகம் சீரியலின் இன்றைய எபிசோட் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மாயாவுக்கு போதை தெரிய வைத்து சந்தியாவுக்கு திதி கொடுக்க ஜானகி ஏற்பாடு செய்திருந்த நிலையில், புவனேஸ்வரி ரகுராமிடம் இந்த விஷயத்தை கொளுத்திப் போட, அவர் கோபமாக குளத்தங்கரைக்கு கிளம்பினார். இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது மாயா குளத்தில் மூழ்கி விட்டு எழுந்து வர, ஜானகி அவள் மீது துண்டை போட்டு திதி கொடுக்க உட்கார சொல்கிறாள். இந்த நேரம் பார்த்து ரகுராம் டென்ஷனாக இங்கு வந்து “பெண்கள் திதி கொடுக்கக் கூடாது, உனக்குத் தெரியாதா?” என ஜானகியிடம் சத்தம் போடுகிறார். 

 மாயா “எங்க அம்மாவோட ஆத்மா சாந்தியடையும் அதுக்காக நான் திதி கொடுப்பேன்.. என்ன விட்டா எங்க அம்மாவுக்கு வேற யாரு திதி கொடுப்பா?” என்று கேட்க, ரகுராம் “நான் கொடுக்கிறேன்” என்று சொல்லி துண்டை வாங்கிக் கொண்டு சென்று குளத்தில் மூழ்கி எழுந்து வந்து உட்கார்ந்து திதி கொடுக்கிறார். 

கொடுத்து முடித்த பிறகு “கிஷோர் இல்லை என்ற காரணத்தினால் நான் திதி கொடுக்க வேண்டியதுதான் போச்சு, அதற்கு காரணம் சந்தியாவுக்கு யாரும் இல்ல அவரு அனாதை என்பதால் தான்” என்று சொல்ல மாயா இதைக் கேட்டு கோபத்தோடு வீட்டிற்கு வந்து விடுகிறாள். 

பிறகு ரகுராம் சட்டை இல்லாமல் வீட்டிற்கு நடந்து வந்து கிணற்றின் அருகே சென்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொள்ள எல்லோரும் அங்கு கூடி விடுகின்றனர். ஜானகி பத்மாவிடம் டவல் எடுத்து வந்து கொடுக்க சொல்கிறாள். அவளின் எடுத்து வந்து கொடுக்க அதை வாங்கிய ரகுராம் கோபப்பட்டு தூக்கி வீச அது மாயாவின் முகத்தில் போய் விழுகிறது. 

“இன்னைக்கு நடந்த எல்லாத்துக்கும் காரணம் இவ இந்த வீட்ல இருப்பது தான்” என மாயாவை குற்றம் சாட்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க 

CM Stalin On michaung: ரூ.4,000 கோடி செலவு வீணா? சென்னை எத்தனை நாளில் சீரடையும்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

School College Leave: கனமழை எதிரொலி..! சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
 

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget