Cooku with Comali Rithika: தாயாவதை க்யூட்டாக அறிவித்த குக்கு வித் கோமாளி ரித்திகா: குவியும் வாழ்த்துகள்!
Rithika: திருமணத்துக்குப் பிறகு சீரியல் உலகில் பெரிதாக எட்டிப்பார்க்காத ரித்திகா, விஜய் தொலைக்காட்சியின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
விஜய் டிவியின் பிரபல கலகல நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானவர் ரித்திகா (Rithika TamilSelvi).
பிரபல சீரியல் நடிகை
குக்கு வித் கோமாளி இரண்டாவது சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த ரித்திகா சீரியல் உலகிலும் பிரபலமாக இருந்தாலும், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனி ரசிகர்களைப் பெற்றார்.
தொடர்ந்து ரித்திகா விஜய் தொலைக்காட்சியில் க்ரியேட்டிவ் தயாரிப்பாளரான வினு என்பவரை எளிய முறையில் காதல் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
திருமணத்துக்குப் பிறகு சீரியல் உலகில் பெரிதாக எட்டிப்பார்க்காத ரித்திகா, விஜய் தொலைக்காட்சியின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் தன் சமூக வலைதளப் பக்கங்களின் மூலமாகவும் தன் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி ஜாலியாக வலம் வருகிறார்.
இன்ஸ்டா பதிவு
இந்நிலையில் ரித்திகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் முக்கியமான லைஃப் அப்டேட் குறித்து உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார். தான் தாயாக உள்ளதை கர்ப்பம் உறுதி செய்யும் கிட் உடன் ‘கம்மிங் சூன்’ எனும் வார்த்தைகளை எழுதி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் “உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனையால் எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்றும் ரித்திகா கேட்டுக் கொண்டுள்ளார்.
View this post on Instagram
ரித்திகாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.