OTT தளத்திற்குள் அடியெடுத்து வைத்த ‘ராஜ் டிவி’... ஏர்டெல் நிறுவனத்துடன் மெகா ஒப்பந்தம்!
இந்த சேவையில் சந்தாதாரர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர மேலும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் காத்திருக்கிறது .
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான ராஜ் டிவி OTT தளத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சன் டிவிக்கு இணையாக தனியார் தொலைக்காட்சியில் ராஜ் டிவிக்கு நீண்ட வரலாறு உண்டு. தமிழ் சினிமாவின் அன்றைய காலக்கட்டம் தொடங்கி பல முக்கியமான கிளாஸிக் படங்கள் எல்லாம் ராஜ் டிவி வசம் தான் உள்ளது. இத்தகைய படங்கள் எப்போது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
#RajTVNetwork enters digital OTT space with the launch of #RajDigitalTV APP built with #AirtelIQ as the technology partner
— Ramesh Bala (@rameshlaus) September 24, 2022
Music Dir @thisisysr launches and Producer @IshariKGanesh graces the launch event along with Adarsh Nair, CEO - Airtel Digital@RajtvNetwork @onlynikil pic.twitter.com/Sw0fS5h1zm
குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் ஒளிபரப்பட்ட போது மாலையில் 4 மணிக்கு தொடங்கி கிட்டதட்ட 12 மணிக்கே படம் முடிவடைந்துள்ளது. சுமார் 4 மணிநேரத்துக்கும் மேல் விளம்பரங்களை ஒளிபரப்பியது அக்காலக்கட்டதில் பெரிய விஷயமாக பேசப்பட்டது. பொழுதுபோக்கு சேனலாக தொடங்கப்பட்ட ராஜ் டிவி, ராஜ் நியூஸ், ராஜ் மியூசிக், ராஜ் டிஜிட்டல் பிளஸ் என பல பரிணாமங்களாக உருவெடுத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் பிற மொழியிலும் ராஜ் டிவி ஒளிபரப்பாகி வருகிறது.
View this post on Instagram
ஆனால் ஒருகட்டத்துக்கும் மேல் போட்டிகளை சமாளிக்க முடியாமல் பின்னடைவை சந்தித்த ராஜ் டிவி தற்போது ஓடிடியில் களமிறங்கியுள்ளது. நேற்று இதற்கான தொடக்க விழா நடைபெற்ற நிலையில் இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். இந்த ஓடிடி தளத்திற்கு ”RAJ DIGITAL TV APP” என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவு ஒன்றில், ராஜ் டிவி நெட்வொர்க் RAJ DIGITAL TV APP-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் டிஜிட்டல் OTT தளத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதன் மூலம் சந்தா அடிப்படையிலான வீடியோ ஆன் டிமாண்ட் சந்தையில் இந்நிறுவனம் நுழைகிறது. மற்ற சந்தா சேவைகளைப் போலவே, இதுவும் Android, iOS மற்றும் இணையத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.