Meenakshi Ponnunga: வெற்றியின் அடிதடிக்கு புல் ஸ்டாப்.. சக்தி எடுத்த முடிவு...மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
Meenakshi Ponnunga July 10: மீனாட்சிக்கு நல்லது செய்வதற்காக தான் நீதிமணி புஷ்பாவின் வீட்டில் இருக்கிறார் என்ற தகவலை ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்று, செல்லமாக சக்தி வெற்றியிடம் சண்டை போடுகிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் மீனாட்சி பொண்ணுங்கவின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது?
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாட்சிக்கு நல்லது செய்வதற்காக தான் நீதிமணி புஷ்பாவின் வீட்டில் இருக்கிறார் என்ற தகவலை ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்று, செல்லமாக சக்தி வெற்றியிடம் சண்டை போடுகிறாள்.
“உன் அப்பாவைக் கண்டுபிடித்ததால் எனக்கு கிஸ் கொடு” என்று கேட்டு, வெற்றி சக்தியுடன் ரொமான்ஸ் செய்கிறான். அடுத்ததாக அம்மாவைப் பற்றி தவறாகப் பேசிய இரண்டு இளைஞர்களை அடித்து வெளுக்கிறான்.
இந்நிலையில், வீட்டுக்கு வந்த வெற்றியை மீனாட்சி திட்டுகிறாள். இனி அடிதடி சண்டைக்கு போகக்கூடாது என்று சொல்கிறாள். மேலும் வெற்றியிடம் சக்தி “அம்மா சொல்வது உண்மைதான்.. இனி நீ எந்த சண்டைக்கும் போடக்கூடாது” என்று கோயிலில் சாமியிடம் வேண்டி, வெற்றியின் கையில் காப்பு கட்டி விடுகிறாள்.
இப்படியான நிலையில் பரபரப்பாக மீனாட்சி பொண்ணுங்க தொடரின் இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

