மேலும் அறிய
Karthigai Deepam serial August 12 : கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ்.. ரம்யாவை கோவிலுக்கு வரவைத்து கோர்த்து விட்ட மாப்பிள்ளை - கார்த்திகை தீபம் இன்று
Karthigai Deepam Today :கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் ஆகஸ்ட் 12
Source : social media
Karthigai Deepam serial August 12 : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரம்யா தீபா கையில் இருந்த கல்யாண புடவையை ஆள் வைத்து கொள்ளையடித்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 12 ) என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது தீபாவிடமிருந்து புடவையை கொள்ளையடித்து வந்தவன் ரம்யாவிடம் கொண்டு வந்து கொடுக்க அவள் சந்தோஷப்படுகிறாள்.

அதே நேரத்தில் தீபா பதற்றத்துடன் வீட்டுக்கு வந்து சோகமாக உட்கார்ந்து இருக்க அங்கு வந்த கார்த்திக்கு என்ன ஆச்சு என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்கிறாள். கார்த்திக் சரி விடுங்க உங்களுக்கு தான் பச்சை கலர் பிடிக்காது என்று சொன்ன தீபா அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்க கார்த்திக் தெரியும் நான் ஒரு முக்கியமான வேலையில் இருக்கும் போது நீங்க போன் பண்ணுவேன் சும்மா உங்களோடு அப்படி விளையாடினேன் என்று சொல்கிறான்.
மேலும் ஒரு கவலை கொடுத்து பிரிச்சு பாருங்க என்று சொல்ல அதில் தீபாவுக்கு பிடித்த ப்ளூ கலரில் புடவை இருக்க அதை பார்த்து தீபா சந்தோஷப்படுகிறாள். சவாலில் ஜெயித்து விட்டதாக எல்லோரிடமும் சொல்கிறாள்.
அதன் தொடர்ச்சியாக ரமேஷ் ரம்யாவை கோவிலுக்கு வர வைக்க இங்கு வந்த ரம்யா எதுக்கு என்ன வர சொன்ன என்று சொல்ல உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்ல அபிராமி என்ட்ரி கொடுக்கிறாள்.
உடனே ரமேஷ் தீபாவோட கல்யாணம், எங்களோட கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு ரம்யா பரிகாரம் செய்ய வந்ததாக சொல்லி கோர்த்து விடுகிறான். உடனே அபிராமி நல்ல விஷயம் உனக்கு நல்ல மனசு என்று சொல்ல ரம்யா வேறு வழியின்றி பரிகாரமாக அங்கபிரதட்சணம் செய்ய அபிராமி கூடவே இருக்கிறாள். இது தான் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion