Karthigai Deepam: ஐஸ்வர்யாவுக்கு வந்த ஆப்பு.. செக்மேட் வைத்த கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்று!
தீபா “எப்படி சார் சிலை கிடைத்தது?” என்று கேட்க, “நீ ஆசைப்பட்ட மாதிரி சிலை கிடைச்சிடுச்சிடுல” என்று மட்டும் சொல்லி நடந்தவற்றை சொல்லாமல் மறைத்து விடுகிறான்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முருகன் சிலை காணாமல் போக கார்த்திக் சிலையை கண்டு பிடிக்க ஒரு நாள் டைம் கேட்டிருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, மறுநாள் காலையில் கார்த்திக் பூசாரியை வைத்து முருகன் சிலைக்கு பூஜை செய்ய, அந்த சத்தம் கேட்டு அங்கு வரும் தீபா சந்தோசப்பட, ஐஸ்வர்யா ஷாக் ஆகிறாள், பிறகு அபிராமி உட்பட மொத்த குடும்பமும் அங்கு வந்து விடுகிறது. அபிராமி என்ன விஷயம் என்று கேட்க, கார்த்திக் ரொம்ப நாளா முருகனுக்கு பூஜை பண்ணனும்னு நினைத்துட்டு இருந்தேன், அதான் இந்த ஏற்பாடு என்று சொல்ல, நல்ல விஷயம் தான் என அபிராமி சொல்கிறாள்.
தீபா “எப்படி சார் சிலை கிடைத்தது?” என்று கேட்க, “நீ ஆசைப்பட்ட மாதிரி சிலை கிடைச்சிடுச்சிடுல” என்று மட்டும் சொல்லி நடந்தவற்றை சொல்லாமல் மறைத்து விடுகிறான். எல்லாரும் களைந்து சென்ற பிறகு கார்த்திக் எப்படி சிலையை எடுத்தான் என ஐஸ்வர்யா சந்தேகத்துடன் புதைத்த இடத்தில தோண்டிப் பார்க்க, அங்கு சிலை அப்படியே இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். பிறகு அவள் அங்கிருந்து திரும்ப பின்னாடி நிற்கும் கார்த்திக் இப்படி மாட்டிகிட்டேன்களே அண்ணி என ஷாக் கொடுக்கிறான்.
“இந்த விஷயம் அம்மாவுக்கு தெரிந்தால் உங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவாங்க, நான் சொல்ற மாதிரி செய்தால் உங்களை மாட்டி விட மாட்டேன்” என செக்மேட் வைக்க ஐஸ்வர்யா வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்கிறான். மறுநாள் காலையில் ஐஸ்வர்யா பக்திமயமாக புடவை கட்டிக்கொண்டு முருகன் சிலையை வீட்டிற்குள் எடுத்து வருகிறாள். முருகன் தான் தனது கனவில் தோன்றி என்னை வீட்டிற்குள் அழைத்துச் செல் என்று சொன்னதாகவும் சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.