மேலும் அறிய
Advertisement
Ethirneechal Serial: ஈஸ்வரியை வெளியே போக சொன்ன தர்ஷினி.. சித்திரவதைப்படுத்தப்படும் அஞ்சனா... எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal serial: குணசேகரன் செய்யும் பிரச்சினையால் தர்ஷினி, ஈஸ்வரியை வெளியே போகச் சொல்கிறாள். அஞ்சனாவை அடித்து சித்தார்த் இருக்கும் இடம் பற்றி விசாரிக்கிறார்கள். எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 12) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வீட்டுக்கு வந்த குணசேகரனிடம் தர்ஷினி ரூமில் ஈஸ்வரி இருப்பதைப் பற்றி வத்தி வைக்கிறாள். அவரும் வேகமாகச் சென்று ஈஸ்வரியை வெளியே போகச் சொல்ல "பெத்த அம்மாவை போய் பிள்ளையை பார்க்க கூடாதுன்னு சொல்றீங்க" என ஞானம் நியாயம் கேட்க, கதிரும் ஈஸ்வரிக்கு ஆதரவாக "அவங்க அவங்க பிள்ளையோட தான் இருப்பாங்க" என சொல்ல, "போங்கடா வெளியே" என அவர்கள் இருவரையும் மிரட்டி அனுப்பிவிடுகிறார் குணசேகரன். எதிர்த்து நின்ற ஜனனியை அவமானப்படுத்துகிறார் குணசேகரன்.
பிரச்சினையை சரி செய்வதற்காக தர்ஷினி குணசேகரன் பக்கம் சென்று "வெளியே போம்மா" என ஈஸ்வரியை விரட்டுகிறாள். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி "போல்ட்டா இரு தர்ஷினி. நாங்க எல்லாரும் உனக்கு இருக்கோம் தர்ஷினி" என ஈஸ்வரி சந்தனம் செய்ய "நீங்க வாங்க அப்பா" என சொல்லி குணசேகரனை அழைத்துச் செல்கிறாள் தர்ஷினி. அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
சித்தார்த்தைக் காணவில்லை என அஞ்சனாவையும் லட்சுமியையும் அடித்து சித்திரவதை செய்கிறார்கள் ராமசாமி அடியாட்கள். "சித்தார்த்தை எங்க ஒளிச்சு வச்சு இருக்க?" என ரவுடி அஞ்சனாவை மிரட்ட "எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என அஞ்சனா அலறுகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி, தர்ஷினி ரூமுக்கு செல்ல, உமையாள் அவளைப் பார்க்கவிடாமல் தடுக்கிறாள். ஈஸ்வரியும் ஞானமும் சேர்ந்து உமையாளை மிரட்டி அனுப்பிவிடுகிறார்கள். சக்தியைக் காணவில்லை என தெரிந்து டென்ஷனான ஜனனியிடம் கதிர் மறைமுகமாக சக்தி சென்றுள்ள இடத்தைப் பற்றி சொல்கிறான். கொன்றவை ஜனனியையும் கதிரையும் வீட்டுக்கு போகச் சொல்லி அனுப்பி வைக்கிறார்.
ராமசாமி மற்றும் கிருஷ்ணாசாமிக்கு ஜனனி அவர்களின் அடியாட்களிடம் இருந்து தப்பித்த தகவல் தெரிய வருகிறது. கரிகாலன் ராமசாமிக்கு போன் செய்து சித்தார்த் பற்றி தகவல் கொடுக்கிறான். அதை நம்பாமல் போனை கட் செய்கிறான் கிருஷ்ணசாமி. சித்தார்த் போட்டோவை அனுப்பியதும் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி உடனே கரிகாலனுக்கு போன் செய்கிறான்.
கரிகாலன் தான் சித்தார்த்தை கடத்தி வைத்திருப்பதாக சொல்லி பணம் கேட்கிறான். அவர்களும் பணம் தருவதாக ஒத்துக்கொள்கிறார்கள். கரிகாலனை கட்டம் கட்டி தூக்கிவிட்டு சித்தார்த் பற்றி விசாரிக்க பிளான் கொடுக்கிறார் குணசேகரன். சித்தார்த்தை ஒப்படைத்தால் உடனே பணத்தை கொடுத்து விடுவதாக கிருஷ்ணாசாமி சொல்கிறான். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion