மேலும் அறிய

Ethir Neechal: மீண்டும் கரிகாலனிடம் சிக்கிய ஆதிரை... வசமாக மாட்டிய ஜனனி டீம் தப்பித்ததா... நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்   

Ethir Neechal Serial May 17th: கரிகாலனிடம் மீண்டும் சிக்கியது ஆதிரை மற்றும் ஜனனி டீம். அவனிடம் இருந்து எப்படி மீண்டும் ஜனனி டீம் தப்பிக்கிறது தான் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்

சன் டிவியில் மிகவும் பரபரப்பாக அடுத்து என்ன நடக்கப்போகிறது என டென்ஷனை அதிகரித்துக்கொண்டே இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். முந்தைய எபிசோடில் கரிகாலனிடம் கண்ணில் மண்ணை தூவி விட்டு எப்படியோ தப்பித்தது ஆதிரை மற்றும் ஜனனி டீம். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்காக நேற்று எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 

Ethir Neechal: மீண்டும் கரிகாலனிடம் சிக்கிய ஆதிரை... வசமாக மாட்டிய ஜனனி டீம் தப்பித்ததா... நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்   
108 முறை எனக்கும் ஆதிரைக்கும் கல்யாணம் சீக்கிரமா நடக்கணும் என வேண்டிக்கொண்ட கரிகாலன் கண்களை திறந்து பார்த்ததும் அருகில் ஆதிரையும் காணவில்லை அண்ணிகளையும் காணவில்லை என அதிர்ச்சி அடைய தலை கால் புரியாமல் இங்கும் அங்கும் ஓடி அவர்களை தேடுகிறான். ஒரு பக்கம் ஜனனி டீம் சக்தி அனுப்பிய காரை தேடி ஓடுகிறார்கள். கரிகாலன் ஒரு பக்கம் ஓட மறுபக்கம் ஜனனி டீம் முக்காடு போட்டு கொண்டு மூச்சிரைக்க ஓடுகிறது. 

கொடைக்கானல் காட்டுப்பகுதியில் வந்து கொண்டு இருக்கிறார்கள் அருண் மற்றும் கௌதம். அருண் கௌதமிடம் நேற்று உன்னை பற்றி தவறாக நினைத்து கோபமாக பேசிவிட்டேன். அதனால் என்னை மன்னித்து விடு. நான் எப்படி உனக்கு நன்றி சொல்ல போகிறேன் என தெரியவில்லை என கௌதமிடம் சொல்கிறான் அருண். பிறகு கெளதம் தனது பிளான் பற்றி சொல்லி ஜனனிக்கு அவர்கள் கொடைக்கானலில் இருந்து கிளம்புவதை பற்றி தெரிவிப்பதற்காக போன் செய்கிறான். ஜனனியும் எல்லாம் தயாராக இருக்கும் நாங்களும் வந்து கொண்டு இருக்கிறோம். நீங்க இப்போ கிளம்புனா சரியா இருக்கும் என கௌதமிடம் சொல்கிறாள். 

கெளதம் அருணிடம் நாம் கொடைக்கானல் ஜங்க்ஷன் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அங்கு நமக்கு தெரிந்தவர்கள்  யாராவது பார்த்துவிட கூடம், அதனால் மிகவும் எச்சரிக்கையாக அந்த இடத்தை கடக்க வேண்டும் என அருணிடம் சொல்கிறான். பின்னர் கார் வேகமாக கொடைக்கானல் மலையில் இருந்து கீழே இறங்குகிறது. 

மறுபக்கம் ஜனனி டீம் எஸ்கேப் ஆகிவிட்டோம் இனிமேல் அந்த முட்டாபய கரிகாலனிடம் சிக்க மாட்டோம் என நந்தினி சொல்ல அங்கு வந்து நிற்கிறான் கரிகாலன், அவனை பார்த்த ஜனனி டீம் ஷாக்கானது. என்னை ஏன் எல்லாரும் விட்டுட்டு ஓடி வந்துடீங்க என லூசு தனமாக அவன் கேட்க எதையோ சொல்லி சமாளித்து விடுகிறார்கள் ஜனனி டீம்.  பாத்ரூம் சென்று வருவதாக சொல்லி மீண்டும் அங்கிருந்து எஸ்கேப். 

Ethir Neechal: மீண்டும் கரிகாலனிடம் சிக்கிய ஆதிரை... வசமாக மாட்டிய ஜனனி டீம் தப்பித்ததா... நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்   

சக்தி கோயிலில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு தயாராக காத்திருக்கிறான். ஐயர் வந்து மணமகன், மணமகள் பெயரை சொல்லி அதரங்களை காண்பித்து ரசீது வாங்கி வர சொல்கிறார். ஜனனி சக்திக்கு போன் செய்கிறாள். அனைத்து ஏற்பாடுகளும் சரியாக நடக்கிறது, சீக்கிரமாக வர சொல்லுகிறான் சக்தி. கார் டிரைவருக்கு போன் செய்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு வர சொல்கிறாள் ஜனனி. 

ஜனனி டீம் கரிகாலனிடம் இருந்து தப்பி ஓடி வந்து கொண்டு இருக்கும் சமயத்தில் சரியாக கார் வர அதில் நால்வரும் ஏறிக்கொள்கிறார்கள். பின்னாடியே கரிகாலன் துரத்தி கொண்டே வருகிறான். அவன் போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால் அவனால் உடனடியாக குணசேகரனுக்கு தகவல் கொடுக்க முடியாது. அதற்கு எப்படியம் ஒரு மணி நேரம் ஆகும் அதற்குள் கல்யாணத்தை முடித்து விடலாம் என பேசிக்கொள்கிறார்கள். 

Ethir Neechal: மீண்டும் கரிகாலனிடம் சிக்கிய ஆதிரை... வசமாக மாட்டிய ஜனனி டீம் தப்பித்ததா... நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்   

மறுபக்கம் திருமண மண்டபத்தில் குணசேகரன் விசாலாட்சியிடம் என்ன அம்மா போனவங்க இன்னும் காணல. குடிகார பய கதிரோட அனுப்பி வைச்சது தப்பா போச்சு என சத்தம் போட்டு கொண்டு இருக்கிறார். ஜான்சி ராணி வந்து கொஞ்சம் ஏத்தி விட்டு கொண்டு இருக்கிறாள். ஐயர் வந்து காத்து கொண்டு இருக்கிறார், இந்த நேரத்தில பொன்னும் இன்னும் வரல என சொன்ன எல்லாரும் தப்பா பேசமாட்டாங்களா என சத்தம் போடுகிறார் குணசேகரன். 

இத்துடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்தது. அடுத்த வாரம் தான் கல்யாணம் எப்படி நடக்கப்போகிறது. அதற்குள் என்னென்ன கூத்து எல்லாம் நடக்கப்போகிறது. குணசேகரன் இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் எப்படி குதிக்கப் போகிறார் என்பது எல்லாம் அடுத்த வாரம் பார்க்கலாம். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget