மேலும் அறிய

Ethir Neechal September 13: அடிச்சு துவைச்சுருவேன்... கரிகாலனை மிரட்டி ஓட விட்ட ரேணுகா... எதிர் நீச்சலில் நேற்று என்ன?

Ethir neechal Sep 13: ரேணுகாவை வேவு பார்க்க வந்த கரிகாலனுக்கு காத்திருந்த ஆப்பு. ஒரு மகளாக கடமையை நிறைவேற்றிய நந்தினி. கடுப்பில் குணசேகரன். நேற்று எதிர் நீச்சல் எபிசோடில் என்ன நடந்தது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ரேணுகா வீட்டுக்கு வந்த டீச்சர் மற்றும் அந்த இரண்டு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு மாடியில் உள்ள ரூமுக்கு வேக வேகமாக செல்கிறாள். "இங்க வீட்டுல யாருக்கும் இது பத்தி தெரியாது. மன்னிச்சுக்கோங்க" என்கிறாள். 

Ethir Neechal September 13: அடிச்சு துவைச்சுருவேன்... கரிகாலனை மிரட்டி ஓட விட்ட ரேணுகா... எதிர் நீச்சலில் நேற்று என்ன?
கீழே கரிகாலன் குணசேகரனை ஏத்தி விடும் படி "இந்த வீட்ல உங்களுக்கு எதிராக பல சதி வேலைகள் நடக்குது" என்கிறான். விசலாட்சி அம்மா அவனை திட்ட "எனக்கு என்னவோ உங்க மேல தான்  டவுட்" என்கிறான். அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல பெரியவனே. நானும் காலையில இருந்து இங்க தானே இருக்கேன்" என சொல்கிறார். "பிள்ளைகளை விட்டு கொடுக்குறதே உனக்கு வேலையாபோயிருச்சு" என சொல்கிறார் குணசேகரன். "எனக்கும் இங்க நடக்குற சதி வேலை எல்லாம் தெரியும். ஆனால் யாரோட வலையிலும் நான் சிக்கமாட்டேன். பார்ப்போம் யார் சிக்குறா யார் தப்பிக்கிறா என்பதை" என்கிறார். 

கரிகாலன் நானும் ஒரு டிகிரி ஹோல்டர் அதனால மேல என்ன டியூஷன் நடக்குதுன்னு நான் போய் பார்த்துட்டு வரேன் என மாடிக்கு செல்கிறான். அதற்குள் ஈஸ்வரி ரேணுகாவுக்கு போன் செய்து கரிகாலன் மேலே வருவதை பற்றி சொல்லி விடுகிறாள். கரிகாலன் குட்டி போட்ட பூனை போல வாசலில் அங்கேயும் இங்கேயும் அலைகிறான். கதவு தாழ்ப்பாள் போட்டு இருப்பதால் தள்ளி தள்ளி பார்க்கிறான். ரேணுகா வெளியில் வந்து "என்ன வேவு பார்க்க சொல்லி அனுப்பி வைச்சங்களா. அனாவசியமா ஏதாவது விஷயத்துல நொழஞ்ச முகரையில மூக்கு வாய் கண்ணு காது எதுவுமே இருக்காது. ஓடி போயிடு" என மிரட்டி விரட்டி விடுகிறாள். 

Ethir Neechal September 13: அடிச்சு துவைச்சுருவேன்... கரிகாலனை மிரட்டி ஓட விட்ட ரேணுகா... எதிர் நீச்சலில் நேற்று என்ன?

ரேணுகா டீச்சரிடம் மன்னிப்பு கேட்கிறாள். "குழந்தைகள் ஆவலுடன் படிக்க வந்து இருக்குங்க அதுகளுக்கு நிம்மதியான ஒரு சூழலை ஏற்படுத்தி கொடுக்க முடியல அது தான் வருத்தமா இருக்கு. இந்த வீட்ல கெட்டதுக்கு தான் மதிப்பு, நல்லதுக்கு யாரும் சப்போர்ட் செய்ய மாட்டாங்க" என சொல்லி வருத்தப்படுகிறாள். பின்னர் டான்ஸ் கத்துக்க வந்த குழந்தைகளுக்கு சில முத்திரைகளை சொல்லி கொடுக்கிறாள் ரேணுகா. 

அம்மாவை பார்ப்பதற்காக நந்தினி வீட்டுக்கு வருகிறாள். ஸ்வீட் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கிறாள். என்ன விசேஷம் என ஆர்வமாக கேட்கிறார்கள். நந்தினி அம்மாவுக்கு பணம் கொடுக்க அவர்கள் ஏது உனக்கு இவ்வளவு பணம் என பதட்டத்துடன் கேட்கிறார்கள். நந்தினி கேட்டரிங் ஆர்டர் எடுத்து இருப்பது குறித்து சொல்லி நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி முதல் சம்பள பணத்தில் கொஞ்சம் கொடுக்க தான் இப்போ என்னால முடிந்தது என சொல்லி கொடுக்கிறாள். 

நந்தினியின் அப்பா அவளின் வாழ்க்கையை சீரழித்தது பற்றி சொல்லி வருத்தப்பட்டு அவளுக்கு இந்த உதவி செய்ததற்கு ஜனனிக்கு நன்றி சொல்கிறார். "நீ நல்லா இருந்தா தான் அம்மா எனக்கு தைரியமே. உன்னோட பொண்ணு இப்போ ஒரு தொழில் அதிபர்" என சொல்லி நந்தினி அவளுடைய அம்மாவை அணைத்து கொள்கிறாள். ஜனனி இதை பார்த்து சந்தோஷப்பட்டாலும் மனசுக்குள் தன்னுடைய அப்பா அம்மாவை நினைத்து வேதனை படுகிறாள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Telangana BRS | விரட்டியடித்த கிராம மக்கள் தெறித்து ஓடிய அதிகாரிகள்கற்களை வீசி தாக்குதல்!OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
Embed widget