மேலும் அறிய

Ethirneechal Monisha : கின்னஸ் சாதனை படத்தை எதிர்நீச்சல் நடிகை... இந்த பொண்ணுக்குள்ள இத்தனை திறமைகளா? ரசிகர்கள் பிரமிப்பு

எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் மகளாக நடிக்கும் மோனிஷா மற்றும் அவரது சகோதரி இருவரும் சேர்ந்து சிலம்பத்தில் கின்னஸ் சாதனை படைத்தது சர்வதேச அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடர் தொடங்கிய நாள் முதல் இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் டி.ஆர். பி ரேட்டிங்கின் வரிசையிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

எதிர் நீச்சல் சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் மாரிமுத்து நடிக்கும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடர் இத்தனை ஸ்வாரஸ்யமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக சித்தரிக்கப்பட்டுள்ளது குணசேகரன் கதாபாத்திரம். ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த தொடரில் ஆதி குணசேகரன் - ஈஸ்வரி தம்பதியின் மகளான தர்ஷினி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மோனிஷா குறித்த தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

Ethirneechal Monisha : கின்னஸ் சாதனை படத்தை எதிர்நீச்சல் நடிகை... இந்த பொண்ணுக்குள்ள இத்தனை திறமைகளா? ரசிகர்கள் பிரமிப்பு

நடிகை மோனிஷா சீரியலில் பல தற்காப்பு கலை மற்றும் ஸ்போர்ட்ஸ்களில் ஆர்வம் உள்ளவராக சில தினங்களுக்கு முன்னர் வெளியான எபிசோடில் ஈஸ்வரி கூறுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றது. அது சீரியலில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் மோனிஷா ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனை. ஸ்விம்மிங், ஹார்ஸ் ரைடிங், மார்ஷல் ஆர்ட்ஸ், கராத்தே, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ஸ்கேட்டிங் இப்படி பல விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்றவர். மோனிஷா மட்டுமன்றி அவரின் சகோதரி இருவருமே அனைத்து விளையாட்டிலும் தேர்ச்சி பெற்று பல சான்றிதழ்களை பெற்றுள்ளனர். 

மோனிஷா மற்றும் அவரது சகோதரி இருவரும் சிலம்ப கலையில் தேர்ச்சி பெற்று இந்தியாவில் வெற்றி பெற்று சர்வதேச அளவில் இந்தியாவின் பிரநிதிகளாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றதோடு கின்னஸ் சாதனையும் படைத்துள்ளனர். இந்தியாவில் கின்னஸ் சாதனை படைத்த முதல் சகோதரிகள் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர். இந்த சகோதரிகள் இருவருமே யுனிக் டேலண்ட் அகாடமி என்ற பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மோனிஷா விளையாட்டு வீராங்கனையாக மட்டுமின்றி நடிப்பிலும் அசத்தி வருகிறார். தனது மூன்று வயது முதல் நடித்து வரும் மோனிஷா, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா, டான்ஸ் ஷோ மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில் அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த நடிகை தேவயானியிடம் இருந்து பாராட்டுகளை பெற்றுள்ளார். அதன் மூலம் அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான 'சந்திரகுமாரி' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் பல சீரியல்களிலும் நடித்துள்ளார் மோனிஷா. இருப்பினும் எதிர்நீச்சல் தர்ஷினி கதாபாத்திரம் தான் அவரை மிகவும் பிரபலமாக்கியது. 

Ethirneechal Monisha : கின்னஸ் சாதனை படத்தை எதிர்நீச்சல் நடிகை... இந்த பொண்ணுக்குள்ள இத்தனை திறமைகளா? ரசிகர்கள் பிரமிப்பு

விளையாட்டு, தற்காப்பு கலை, இசை கலைஞர் என பல திறமைகளை கொண்டுள்ள மோனிஷா ஒரு நல்ல மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாகவும் இருக்கிறாராம். எதிர் நீச்சல் சீரியல் ஆடிஷன் சமயத்தில் கூட அவர் எம்.ஆர். ராதா குரலில் பேசி இயக்குனர் திருச்செல்வத்தை அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷாவின் கின்னஸ் சாதனைக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எதிர்நீச்சல் ரசிகர்கள் அனைவரும் மோனிஷாவின் இந்த அபாரமான திறமைக்கும், கின்னஸ் சாதனைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.    

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget