![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhagyalakshmi Serial: அமிர்தா காலில் விழுந்த எழில்.. உண்மை தெரிந்த பாக்யா எடுக்கப்போகும் முடிவு என்ன? .. இன்றைய எபிசோட் இதோ..!
Bhagyalakshmi Serial Written Update Today (06.02.2022): பாக்கியலட்சுமி சீரியலில் எழில் எதனால் வர்ஷினியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார் என்ற உண்மை பாக்யாவுக்கு தெரிய வருகிறது.
![Bhagyalakshmi Serial: அமிர்தா காலில் விழுந்த எழில்.. உண்மை தெரிந்த பாக்யா எடுக்கப்போகும் முடிவு என்ன? .. இன்றைய எபிசோட் இதோ..! bhagyalakshmi serial today 06th Februrary 2022 episode 731 Ezhil explains his situation with guilty as Baakiyalakshmi overhears it Bhagyalakshmi Serial: அமிர்தா காலில் விழுந்த எழில்.. உண்மை தெரிந்த பாக்யா எடுக்கப்போகும் முடிவு என்ன? .. இன்றைய எபிசோட் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/d081aa766e1b5e3e3e772140419879dd1675655557807572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் எதனால் வர்ஷினியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார் என்ற உண்மை பாக்யாவுக்கு தெரியும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
முன்னதாக ஈஸ்வரியின் கட்டாயத்தால் வர்ஷினியுடன் எழிலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. அங்கு வரும் அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி திட்டும் காட்சிகள் ஒளிபரப்பானது.
View this post on Instagram
இன்றைய எபிசோடில் நடப்பது என்ன?
இன்றைய எபிசோடில் எழில் திருமணத்தை நிறுத்த அமிர்தா வந்திருப்பதாக நினைத்து ஈஸ்வரி அவரை திட்டி தீர்க்கிறார். ஆனால் தனக்கு எழில் கல்யாணம் என தெரியாது என சொல்லி அமிர்தா சொல்வதை ஈஸ்வரி நம்பவேயில்லை. இதனால் கதறி அழும் அமிர்தாவை, ஈஸ்வரியை அனுப்பி விட்டு ஜெனி சமாதானப்படுத்துகிறார். மேலும் எழிலுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றும், பாட்டியின் கட்டாயத்தில் தான் திருமணம் நடைபெறுவதாகவும் ஜெனி தெரிவிக்கிறார்.
தொடர்ந்து இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் என நினைத்து உள்ளே வரும் அவர் ஒருவழியாக எழிலிடம் அமிர்தா வந்ததை சொல்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் எழில், வேகமாக மண்டபத்தில் இருந்து வெளியே ஓடுகிறார். அவர் ஓடுவதைப் பார்த்த பாக்யா என்னவென்று ஜெனியிடம் விசாரிக்க, அமிர்தா வந்த கதையை கூறுகிறார்.
இதனால் அதிர்ச்சியடையும் பாக்யா வெளியே சென்று பார்க்கிறார். அப்போது அமிர்தா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் எழில், தான் வீட்டை மீட்க பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் வர்ஷினியை கல்யாணம் பண்ண சம்மதித்ததாக கூறுகிறார். மேலும் பணத்திற்காக பண்ணவில்லை என்றும், வீட்டில் உள்ளவர்களின் நிலைமையை நினைத்து தான் இப்படி ஒரு முடிவு நடந்ததாகவும் எழில் கூறுகிறார். ஆரம்பத்தில் இருந்தே எழில் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டிருந்த பாக்யா, உண்மை தெரிந்ததும் அதிர்ச்சியடையும் காட்சியோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)