மேலும் அறிய
Advertisement
Baakiyalakshmi Serial August 23 : கோபியை அவாய்ட் பண்ணும் பாக்கியா குடும்பம்... பாக்கியலட்சுமியில் இன்று
Baakiyalakshmi serial today : ராமமூர்த்தி பிறந்தநாள் விழா களைகட்டுகிறது. இருந்தும் அனைவரின் நினைப்பும் எழில் மீது தான் இருக்கிறது. எழில் எடுக்க போகும் முடிவு என்ன?
Baakiyalakshmi serial August 23 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 23) எபிசோடில் ஈஸ்வரி 12 மணி ஆனதும் ராமமூர்த்திக்கு வாழ்த்து சொல்வதற்காக தூங்காமல் காத்திருக்கிறார். 12 மணி ஆனதும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி சாக்லேட் கொடுக்கிறார். ராமமூர்த்தியும் முதல்முறையாக ஈஸ்வரி இது போல வாழ்த்து சொன்னதால் மிகவும் சந்தோஷப்படுகிறார். இருவரும் சந்தோஷமாக சிரித்து பேசி கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்த நாள் காலை தாத்தா வெளியே வந்ததும் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்கிறார்கள். ஆனால் தாத்தாவோ போனை எடுத்து எடுத்து பார்த்துவிட்டு கவலையுடன் வைத்து விடுகிறார். எழில் போன் பண்ணி வாழ்த்து சொல்லவில்லை என்பது தான் அவரின் கவலை. "இனியா நான் வேணும்னா அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லவா?" என கேட்க ஈஸ்வரி அவளை தடுத்து விடுகிறார்.
பூஜை சாமான்களை எடுத்து வைக்க சென்ற பாக்கியாவிடம் செழியன் போய் "ஏன் எழிலுக்கு தகவல் சொல்லவில்லை. அவன் பங்சகனுக்கு வந்து இருப்பான் இல்லையா" என கேட்க "பாட்டி கூப்பிட்டு இருப்பாங்க. அவன் நிச்சயம் கோயிலுக்கு வருவான். எனக்கு நம்பிக்கை இருக்கு" என திரும்ப திரும்ப அதையே சொல்கிறாள் பாக்கியா.
இனியா ஈஸ்வரியிடம் "அம்மா பண்றது சரியே இல்லை. அண்ணனுக்கு சொல்லவே மாட்டேங்கிறாங்க. எத்தனை தடவை கேட்டாலும் அண்ணன் அங்க வரும்னு சொல்றாங்க" என சொல்ல ஈஸ்வரியும் எனக்கும் அது தான் தோணுது என்கிறார்.
ஜெனி செழியனிடம் எழில் பற்றி விசாரிக்கிறான். "ஆண்ட்டி கேட்டியா? எழிலுக்கு சொல்லவேணாமா?" என சொல்ல "அம்மா அதையே தான் சொல்றாங்க. எழில் கோயிலுக்கு வருவான்னு சொல்றாங்க" என செழியன் சொல்கிறான்.
பின்னர் அனைவரும் கோயிலுக்கு கிளம்புகிறார்கள். செழியன் காரில் ஏறி உட்கார அதை பார்த்த கோபி செழியனுக்கு போன் செய்கிறார். ஆனால் செழியன் போனை கட் பண்ணி விடுகிறான், கோபி இனியாவுக்கு பின் பண்ண அவளும் காலை கட் பண்ணிவிடுகிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உடல்நலம்
அரசியல்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion