மேலும் அறிய

Baakiyalakshmi: வசமாக மாட்டிக்கொண்ட கோபி... ஆக்ரோஷமாக ராதிகா வீட்டுக்குச் சென்ற பாக்கியா... பாக்கியலட்சுமியில் இன்று! 

Baakiyalakshmi Sep 22: கோபி தான் வீடு புகுந்து லைசென்ஸை திருடி சென்று உடைத்து போட்டார் என்பதை அனைவரிடத்திலும் சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறான் எழில்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியாவின் லைசென்ஸ் எப்படி பழனிச்சாமி கைக்கு போச்சு, இன்னும் வேற என்னவெல்லாம் கொடுத்து வைச்சு இருக்க என கேள்விகளால் பாக்கியாவை அவமானப்படுத்த அந்த நேரத்தில் எழில் வீட்டுக்கு வருகிறான்.

கத்திக்கொண்டு இருக்கும் கோபியைப் பார்த்து "லைசென்ஸ் எப்படி அவர் கைக்கு போச்சுன்னு நான் சொல்லட்டுமா? அது ஒன்னும் அவர் கைக்கு நேர போகல இரண்டு துண்டா போச்சு... இப்போவது புரியுதா? ஒருத்தர் வந்து வீட்டில இருந்து லைசென்ஸை திருடிட்டு போய் இரண்டு துண்டா உடைச்சு போட்டாங்க. அந்த உடைஞ்சுபோன துண்டு தான் பழனிச்சாமி சார்கிட்ட போயிருக்கு" என சொல்கிறான் எழில்.

 

Baakiyalakshmi: வசமாக மாட்டிக்கொண்ட கோபி... ஆக்ரோஷமாக ராதிகா வீட்டுக்குச் சென்ற பாக்கியா... பாக்கியலட்சுமியில் இன்று! 
அனைவரும் எதுவும் புரியாமல் பார்க்க, அமிர்தா என்ன சொல்றீங்க எனக்கு எதுவுமே புரியல என்கிறாள்."வீட்டுக்குள் புகுந்து லைசென்ஸை திருடியது இவர் தான். நேரா பிரெண்ட் கிட்ட போய் பாக்கியா நடுத்தெருவில் நிக்கணும், போலீஸ் அரெஸ்ட் பண்ணனும் என்று நீங்க போட்ட பிளான் பத்தி சொன்னது ஞாபகம் இருக்கா? அந்த நேரத்தில் எதேச்சையாக பழனிச்சாமி அந்த ஹோட்டலுக்கு வந்ததால் நீங்க பேசுனது எல்லாத்தியும் கேட்டுட்டார். அப்போ நீங்க உடைச்சு தூக்கி போட்ட லைசென்ஸை தான் பழனிச்சாமி சார் போட்டோ எடுத்து அனுப்பினார்" என்கிறான் எழில். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

"இத்தனை நாளா நீங்க ஏமாற்றுக்காரர் என்று தான் நினைத்தேன் ஆனா இப்படி ஒரு திருட்டு புத்தி இருக்கும்னு தெரியாம போச்சே" என்கிறாள் பாக்கியா. "அப்போ நீ கார் அனுப்பி வச்சது எல்லாம் எங்க மேல இருந்த அக்கறையால இல்லையா? பாக்கியாவை பழிவாங்கணும் அதனால தானா? உனக்கு எப்போ இந்த மாதிரி புத்தி எல்லாம் வந்துச்சு கோபி. நீ செய்தது ரொம்ப தப்பு" என்கிறார் ஈஸ்வரி.  

அனைவரும் கோபியை திட்டி வீட்டை விட்டு வெளியே போகச்சொல்கிறார்கள். அசிங்கப்பட்டு பாக்கியா வீடு வெளியே கோபி இருப்பதை ராதிகா பார்த்து விடுகிறாள். கோபி வீட்டுக்குச் சென்றதும் ராதிகா கோபமாக நிற்கிறாள். கோபி பாக்கியா அவருடைய ஆபிஸுக்கு வந்து பீத்திகிட்டு சவால் விட்டுட்டு போன விஷயத்தை பத்தி ராதிகாவிடம் சொல்லி, அதுக்காக நாலு வார்த்தை கேக்கணும்னு தான் வீட்டுக்கு போனேன்.

"என்னோட மொத்த குடும்பத்தை யும்எனக்கு எதிரே திருப்பிட்டா. அவ நல்லாவே இருக்கக் கூடாது. அவ அழியுறத நான் என்னோட கண்ணால பாக்கணும். என்னோட அம்மா அப்பா பசங்க என எல்லாரும் ஒரு குடும்பமா வாழனும்னு ஆசையா இருக்கு" என்கிறார் கோபி. 

 

Baakiyalakshmi: வசமாக மாட்டிக்கொண்ட கோபி... ஆக்ரோஷமாக ராதிகா வீட்டுக்குச் சென்ற பாக்கியா... பாக்கியலட்சுமியில் இன்று! 


பாக்கியா, நான் என்ன தப்பு பண்ணேன் என சொல்லி கவலையுடன் பேசுகிறாள். நாம அமைதியா இருக்குறதால தான் இது போல எல்லாம் நடக்குது. இனிமே இது மாதிரி நடக்கக்கூடாது. ஒரு நிமிஷம் நான் போய்ட்டு வந்துடறேன் என சொல்லி ராதிகா வீட்டுக்குப் போய் கதவைத் தட்டுகிறாள். ராதிகா கதவைத் திறந்து பார்க்க, அங்கே பாக்கியா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் ராதிகா. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Embed widget