மேலும் அறிய

Baakiyalakshmi: லைசென்ஸை திருடிய கோபி... பரிதாப நிலையில் பாக்கியா... பாக்கியலட்சுமியில் பரபரப்பு!  

Baakiyalakshmi Sep 16: ஒரிஜினல் லைசென்ஸை வீட்டுக்கு வந்து ராமமூர்த்தி எடுப்பதற்கு முன்னரே கோபி எடுத்துச் சென்று விடுகிறார். பதற்றத்தில் தவிக்கும் பாக்கியாவின் நிலை என்ன? பாக்கியலட்சுமியில் இன்று... 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியா ராமமூர்த்திக்கு போன் செய்து வீட்டில் இருக்கும் ஒரிஜினல் லைசென்ஸை ஃபோட்டோ எடுத்து அனுப்புமாறு கூறுகிறாள். ராமமூர்த்தியும் "நீ ஒன்னும் பயப்படாத மா. நா உடனே வீட்டுக்கு போய் அனுப்பி வைக்கிறேன்" என சொல்லி அமிர்தாவை அழைத்துக் கொண்டு வேகவேகமாக வீட்டுக்கு ஆட்டோவில் செல்கிறார். 

Baakiyalakshmi: லைசென்ஸை திருடிய கோபி... பரிதாப நிலையில் பாக்கியா... பாக்கியலட்சுமியில் பரபரப்பு!  

அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்ட கோபி, இனியாவுக்கு போன் செய்து அங்கு நடந்த பிரச்சினை குறித்து கேட்டு தெரிந்து கொள்கிறார். ஈஸ்வரியிடம் போனை கொடுக்கச் சொல்லி அவரை ஏத்தி விடுகிறார். "அது தான் அவளோட அவ்வளவு பெரிய ட்ரிப் எல்லாம் போக வேண்டாம் என சொன்னேன். எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி பேசினாள் இல்ல.. அவளே அவ பிரச்சினையை சமாளிச்சுக்கட்டும். நான் உங்களுக்கு கார் அனுப்புறேன் நீங்களும் இனியாவும் அதில வந்துடுங்க" என சொல்லி போனை வைத்து விடுகிறார் கோபி. 

கோபி நண்பர் ஒருவருக்கு போன் செய்து அவர் அனுப்பும் லொகேஷனுக்கு கார் ஒன்றை அனுப்பி அம்மாவையும் பொண்ணையும் அழைத்து வர சொல்கிறார். இனியாவுக்கும் போன் செய்து கார் அனுப்புவதை பற்றி சொல்கிறார். இனியாவும் கோபி இப்படி பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். 

காரில் கோபி வந்து கொண்டு இருக்கும் போது ராதிகா போன் செய்ய "நான் வந்து கொண்டே இருக்கிறேன் என்று தான் சொன்னேன்" என சொல்லி ஏமாத்திவிடுகிறார்.  அங்கே கேன்டீனில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் "பாக்கியாவுக்கு சப்ஸ்டியூடாக ஒருத்தங்க இங்கே இருந்தாங்களே அவங்க எங்க?" என கேட்கிறாள். "அமிர்தா வீட்டுக்கு போய் இருக்காங்க" என சொன்னதும் "அவங்களும் போயாச்சா விளங்கிடும்" என்கிறாள் பாக்கியா.

Baakiyalakshmi: லைசென்ஸை திருடிய கோபி... பரிதாப நிலையில் பாக்கியா... பாக்கியலட்சுமியில் பரபரப்பு!  

ராமமூர்த்தியும் அமிர்தாவும் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர் கோபி வீட்டுக்குச் சென்று தன்னிடம் இருந்த சாவியை வைத்து வீட்டுக்கு போய் பாக்கியாவின் ஒரிஜினல் லைசென்ஸை எடுத்துக் கொண்டு சென்றுவிடுகிறார். ராமமூர்த்தியும் அமிர்தாவும் வீட்டுக்கு வந்து வீடு முழுக்க தேடியும் அவர்களுக்கு லைசென்ஸ் கிடைக்காதல் அதை பற்றி பாக்கியாவிடம் சொல்ல பாக்கியா டென்ஷனாகிறாள். 

அதற்குள் போலீஸ்காரர்கள் லைசென்ஸ் வருமா வராதா எனக் கேட்க பதற்றமாகிறாள் பாக்கியா. எழிலிடம் கேட்டு பார்க்கிறேன் என எழிலுக்கு போன் செய்கிறாள். 

மறுபக்கம் கோபி தனது நண்பரை ஹோட்டலில் சந்திக்கிறார். அப்போது பாக்கியா ஆக்சிடென்ட் செய்தது பற்றியும், லைசென்ஸ் இல்லாமல் போலீசிடம் மாட்டிக்கொண்டது பற்றியும் சொல்கிறார். அதனால் வீட்டுக்குச் சென்று அவரின் ஒரிஜினல் லைசென்ஸை எடுத்துவிட்டதைப் பற்றியும் சந்தோஷமாக சொல்லி கொண்டு இருக்கிறார். அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி அதே ஹோட்டலுக்கு வருகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget