மேலும் அறிய

Baakiyalakshmi Aug 21: அசிங்கப்பட்ட ராதிகா... ஏமாந்து போன கோபி... மீண்டும் ஜெயித்த பாக்கியா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் 

* பாக்கியாவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கோடீஸ்வரன் * ஏமாற்றத்தில் கொந்தளிக்கும் கோபி - ராதிகா இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் ராதிகா ஏதோ ஒரு ஆபிஸ் பைலை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தால் கோபியிடம் சொல்லி எடுத்து வர சொல்கிறாள். கோபியும் அதை ராதிகாவின் ஆபிஸுக்கு கொண்டு வந்து கேன்டீன் வாசலில் இருந்து ராதிகாவுக்கு போன் மூலம் தகவல் சொல்கிறார். ராதிகா கோபியை "அங்கேயே இருங்க நான் வரேன்" என சொல்லி ராதிகாவும் கேன்டீனுக்கு வருகிறாள்.

Baakiyalakshmi Aug 21: அசிங்கப்பட்ட ராதிகா... ஏமாந்து போன கோபி... மீண்டும் ஜெயித்த பாக்கியா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் 

கோபி கேன்டீனுக்குள் நுழைய அங்கே பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசி கொண்டு இருப்பதை பார்த்து ஷாக்காகிறார். "இங்கேயும் மீட் பண்ணி பேசிக்க ஆரம்பிச்சுட்டாங்களா? அவன் தான் வெட்கமே இல்லாம அலையறானா இவளுக்கு எங்க போச்சு அறிவு?" என திட்டி தீர்க்கிறார். 

கேன்டீன் கையை விட்டு போனதை நினைத்து மிகவும் மனவேதனையில் பழனிச்சாமியிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள். "அவரோட வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்களை பார்த்து இருப்பார். நீங்க ஒரு தடவை அவருகிட்ட வாய்ப்பு கேட்டு பேசி பாருங்க" என பழனிச்சாமி கோடீஸ்வரன் சார் கிட்ட பேசி பார்க்க சொல்கிறார். "வாய்ப்பு குடுத்தாருன்னா சந்தோஷம் இல்லனா அதைவிட சந்தோஷம் என சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்" என்கிறார் பழனிச்சாமி.

Baakiyalakshmi Aug 21: அசிங்கப்பட்ட ராதிகா... ஏமாந்து போன கோபி... மீண்டும் ஜெயித்த பாக்கியா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் 

ராதிகா கேன்டீனுக்கு வந்து பைலை வாங்கிக்கொண்டு நடந்த விஷயங்களை பற்றி கோபியிடம் சொல்கிறாள். கேன்டீன் பாக்கியா  கையை விட்டு போக போவதை தெரிந்ததும் மிகவும் சந்தோஷப்படுகிறார் கோபி. 

பழனிச்சாமி கொடுத்த தைரியத்தில் கோடீஸ்வரன் சாரிடம் போய் பேசுவதற்காக பாக்கியா வருகிறாள். அந்த நேரத்தில் கோபி கேன்டீனில் இருப்பதை பார்த்து  பாக்கியா அதிர்ச்சி அடைகிறாள். பழனிச்சாமி "கவலை படாதீங்க மேடம் நீங்க போய் தைரியமா பேசிட்டு வாங்க..." என சொல்கிறார். 

பின்னாடியே ராதிகாவும் "நானும் போய் கோடீஸ்வரன் சாரை எப்படியாவது இந்த கேன்டீன் அவங்களுக்கு திரும்பவும் கிடைக்க விடாத மாதிரி பண்ணிட்டு வரேன்" என சொல்ல கோபியும் "போ போ போய் நல்லா சொல்லிட்டு வா, அவளுக்கு இந்த கேன்டீன் இனிமே கிடைக்கவே கூடாது" என அவளை அனுப்பி வைக்கிறார். 

பாக்கியா கோடீஸ்வரன் சாரை பார்த்து பேசி மன்னிப்பு கேட்டு ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என ரெக்வஸ்ட் செய்து கொண்டு இருக்க ராதிகா "அதெல்லாம் முடியாது. நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த டார்கெட்டை முடித்தோம். எல்லார் முன்னாடியும் எங்களை அசிங்கப்படுத்திடீங்க" என கோபப்பட, கோடீஸ்வரன் "கொஞ்ச நேரம் அமைதியா இருங்க ராதிகா" என அவளை அடக்கிவிடுகிறார். 

"தப்பு செய்வது சகஜம் தான் அதனால் உங்களுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுக்கிறேன். இனிமேல் இந்த மாதிரி நடக்க கூடாது" என வார்ன் செய்து பாக்கியவை அனுப்பிவிடுகிறார். செல்வியும் பாக்கியாவும் கோடீஸ்வரன் சாருக்கு நன்றி சொல்லிவிட்டு வருகிறார்கள். வெளியே வந்த பாக்கியா அவளுடைய டீமில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும்  அட்வைஸ் செய்கிறாள். அவர்களும் இனிமேல் நாங்கள் கவனமாக இருக்கிறோம் என்கிறார்கள். செல்வியிடம் "நான் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிட்டு போனேன்" என பாக்கியா சொல்ல செல்வி அவளுடைய புருஷன் குடித்துவிட்டு வந்து குழந்தைகளை அடித்ததை பற்றி சொல்லி கண்ணீர் விடவே பாக்கியா அவளை மன்னித்து ஆறுதல் சொல்கிறாள். பழனிச்சாமியும் லோபித்தவும் பாக்கியாவுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். 

Baakiyalakshmi Aug 21: அசிங்கப்பட்ட ராதிகா... ஏமாந்து போன கோபி... மீண்டும் ஜெயித்த பாக்கியா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் 

ராதிகா நல்ல செய்தியுடன் வருவாள் என மிகவும் ஆவலாக காத்துகொண்டு இருக்கிறார். ராதிகா வீட்டுக்கு வந்ததும் "பாக்கியா நடுத்தெருவுக்கு வந்துட்டாளா" என சந்தோஷமாக கேட்க ராதிகா நடந்தை சொல்லி "நாம நினைச்சது எதுவுமே நடக்கல கோபி" என சொன்னதும் அதிர்ச்சியடைகிறார் கோபி. 

சமாதானப்படுத்தி கொண்ட கோபி "அவ சமையலில் ஒரு தடவை சொதப்பி இருக்கா என்றால் அவள் தடுமாற ஆரம்பிச்சுட்டா என அர்த்தம், சீக்கிரமா அவள் சறுக்கிடுவா. இதை எல்லாம் நாம பார்க்க தான் போறோம்" என சொல்லி அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்ததது. 

தலைப்பு செய்திகள்

விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget