உங்கள் லிஸ்டில் சேரப்போகும் அடுத்த விஜய் டிவி சீரியல்..."கண்ணே கலைமானே"
Kanne Kalaimane: விஜய் டிவி சீரியல்களில் புதிதாக ஒன்று சேர உள்ளது. "கண்ணே கலைமானே" சீரியல் இன்னும் இரண்டு வாரத்தில் புரோமோ ஒளிபரப்பாகும். எத்தனை பேர் இந்த சீரியல்காக வெயிட்டிங்.
Upcoming new serial in Vijay TV: உங்கள் வாட்ச் லிஸ்டில் சேரப்போகும் மற்றுமொரு விஜய் டிவி சீரியல்...விரைவில்
சீரியல்கள் பார்க்காத வீடுகளே இல்லை. இல்லத்தரசிகளின் ஒன் அண்ட் ஒன்லி புல் டைம் எண்டர்டெயின்மெண்ட் சீரியல்கள் தான். இந்த சேனல் அந்த சேனல் என மாறி மாறி சீரியல் பார்பவர்களுக்கான ஒரு முக்கியமான அறிவிப்பு உள்ளது.
காலை முதல் மாலை வரை பல பெயர்களில் பல விதமான சீரியல்கள் ஒளிபரப்பும் சேனல்களின் முன்னோடி ஸ்டார் விஜய் தொலைக்காட்சி. தற்போது ஸ்டார் விஜய் டிவியில் புதிதாக ஒரு சீரியல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த புதிய சீரியலின் பெயர் " கண்ணே கலைமானே".
முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த விவரம் :
புதிய சீரியலில் பவித்ரா அரவிந்த், நந்தா, மற்றும் ராஷ்மி பிரபாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் இதுவரையில் தெரியவில்லை. ஆனால் இது மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய கதாபாத்திரங்கள் தவிர மற்ற கதாபாத்திரங்கள் பற்றியோ நடிகர்கள் பற்றியோ எந்த ஒரு தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை. உங்களால் முடிந்தால் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை யுகிங்க பார்க்கலாம்.
View this post on Instagram
இரண்டு வாரத்தில் புரோமோ வெளியாகும்:
குடும்பத்தில் உறவுகளுக்குள் ஏற்படும் கசப்பு தண்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்த சீரியல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் "கண்ணே கலைமானே" சீரியல் குறித்த புரோமோ இன்னும் இரண்டு வாரங்களில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இந்த சீரியல் தொலைக்காட்சியில் அல்லது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்து அல்லது எபிசோடை டவுன்லோட் செய்து பார்க்கலாம்.
பிரபலமான சீரியல் :
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பவித்ரா கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "அம்மன்" சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் கன்னட தொலைக்காட்சியில் "மாங்கல்யம் தந்துனானே" என்ற தொடரிலும் நடித்துள்ளார். ராஷ்மி பிரபாகர், கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் மற்றும் கன்னட சீரியல் "சுபவிவாஹா" என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்."கோகுலத்தில் சீதை" சீரியல் மூலம் பிரபலமான நந்தா மாஸ்டர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.