மேலும் அறிய

TV Serials: ஒரே நாளில் ஒளிபரப்பை தொடங்கும் 4 புதிய சீரியல்கள்.. உங்கள் சாய்ஸ் எது?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சீரியல்களை புதிதாக ஒளிபரப்பு செய்தாலோ அல்லது மறு ஒளிபரப்பு செய்தாலோ டிவி முன்பு உட்கார்ந்து பார்ப்பவர்கள் அதிகம்.

சின்னத்திரையில் இன்று ஒரே நாளில் 4 புதிய சீரியல்கள் தங்கள் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. 

பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த சீரியல்களை புதிதாக ஒளிபரப்பு செய்தாலோ அல்லது மறு ஒளிபரப்பு செய்தாலோ டிவி முன்பு உட்கார்ந்து பார்ப்பவர்கள் அதிகம்.  கொரோனா காலக்கட்டத்தில் டிவி தொடர்களின் படப்பிடிப்புகள் முடங்கிய நிலையில் பழைய சீரியல்கள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் டிஆர்பி ரேட்டிங் வழக்கமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பியை விட எகிறியது. 

இப்படியான நிலையில் முந்தைய காலக்கட்டத்தைப் போல சீரியல்கள் எல்லாம்  பல ஆண்டுகள் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. அதிகப்பட்சம் 3 ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதே பெரிய கதையாக உள்ளது. இப்படியான நிலையில் இன்று ஒரே நாளில் 4 புதிய சீரியல்கள் தங்கள் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம். 

நினைத்தேன் வந்தாய்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நினைத்தேன் வந்தாய்’ என்ற சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடிக்க, கீர்த்தனா பொட்வால் கணேஷின் முதல் மனைவியாக வருகிறார். அவர் இறந்து விட்ட நிலையில் தனது 4  குழந்தைகளான கனிஷ்கா, கௌஷிக், யுக்தா, ஷாபா ஆகியோரை கணேஷ் வளர்க்க தடுமாறுகிறார். இதனால் அங்கு வரும் ஜாஸ்மின் இந்த குழந்தைகளுக்கு தாயாக மாறுவாரா? என்பதே இந்த சீரியலின் கதையாகும்.

சின்ன மருமகள் 

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் “சின்ன மருமகள்”. பள்ளியில் படிக்கும் மாணவி தமிழ் செல்வியின் கனவை உடைத்து அவளுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுக்கிறார்கள். திருமணம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்பு போலீஸூக்கு போன் செய்து மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் திருமணம் நின்று போன நிலையில், தமிழ் செல்வியின் படிக்கும் கனவு பலித்ததா? இல்லை இல்வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டாரா? என்ற ரீதியில் இந்த சீரியல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நவீன் குமார், ஏஒய்கே சுந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

தங்க மகள் 

இதே விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “தங்க மகள்”. இதில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் யுவன், அஸ்வினி, தலைவாசல் விஜய், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் விபத்தில் இறந்த தலைவாசல் விஜய் மகள்களுக்கும், விபத்தை நிகழ்த்திய வினோதினி மகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் கதையாகும். 

கௌரி சீரியல் 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து நடிகை சுஜிதா கலைஞர் டிவிக்கு மாறியுள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் “கௌரி” என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. கடவுள் மற்றும் தீய சக்திக்கு இடையே நடக்கும் கதைக்களமாக இந்த சீரியல் உருவாகியுள்ளது. இந்த சீரியலில் சுஜிதா அம்மனாக நடிக்கிறார். கௌரி சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

தலைப்பு செய்திகள்

புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
Karthigai Deepam: நின்று போன கும்பாபிஷேகம்.. கார்த்தியை ஒதுக்கி வைத்த கிராமம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நின்று போன கும்பாபிஷேகம்.. கார்த்தியை ஒதுக்கி வைத்த கிராமம் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
ADMK:
ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Embed widget