Urfi Javed: துபாயில் அரைகுறை ஆடையோடு இன்ஸ்டா ரீல்ஸ்; ஊர்ஃபி ஜாவேத்தை மடக்கிப்பிடித்து கைது செய்த காவல்துறை!
தொலைக்காட்சி நடிகை ஊர்ஃபி ஜாவேத் அறைகுறை உடை அணிந்ததின் காரணமாக துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
உர்ஃபி ஜாவேத் இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் சமூக ஊடக மாடல் ஆவார். பிரபல ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த இவர், 2021 ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பொது வெளியில் ஆடைகளை மிகவும் கவர்ச்சியாக அணிந்து வருவதன் மூலம் பிரபலமான இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோயர்களுக்கு மேல் உள்ளனர்.
ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 24x7 பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றது முதல் பாலிவுட்டின் சமீபத்திய ஃபேஷன் சென்சேஷனாக வலம் வருவது வரை உர்ஃபி ஜாவேத்; எதை செய்தாலும் அது ஹிட்! ஒரு பக்கம் இவரது ஆடை இணையத்தில் ட்ரெண்ட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், மற்றொரு பக்கம் இவரை இணையவாசிகள் கண்டபடி ட்ரோல் செய்கிறார்கள்; ஆனால் இவை எதற்கும் தயங்காமல் உர்ஃபி தொடர்ந்து இன்ஸ்டாவில் கடமையே கண்ணாக தன் படங்களை பதிவிட்டு லைக்ஸ் அள்ளியபடியே உள்ளார்.
View this post on Instagram
இந்த நிலையில் நடிகை உர்ஃபி ஜாவேத் உடலை வெளிக்காட்டும் வகையில் ஆடை அணிந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததற்காக துபாய் போலீஸ் அவரை கைது செய்துள்ளது. தற்போது வெளியாகிய தகவல்களின் அடிப்படையில், எந்த மாதிரியான உடை அணிந்திருந்தார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் அந்த நாட்டின் விதிகளை மீறும் வகையில் அவர் உடை அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகை கைது செய்யப்படும்போது இன்ஸ்டாகிராம் ரீலுக்காக அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்த நடிகை சுடிதார் அணிந்து கடற்கரையில் சுற்றி வரும் போட்டோ இணையத்தில் வைரலாக, இணையவாசி ஒருவர், "கடற்கரைக்கு இந்த உடையை அணிந்து போவார். ஆனால் பீச்சிற்கு அணிய வேண்டிய உடையை மற்ற இடங்களுக்கு அணிந்து செல்வார்" என்று அவரை கமெண்ட் செய்தார்.
சமீபத்தில் உர்ஃபி மற்றும் பிரபல நாவலாசிரியர் சேத்தன் பகத் இடையேயான வாதம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
சேத்தன் பகத் உர்ஃபி ஜாவேத்தின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில், “இந்த காலத்தில் இளைஞர்களில் கவனத்தை சிதறடிப்பதில் முக்கியப்பங்கு மொபைல் போனுக்கு இருக்கிறது. குறிப்பாக, ஆண் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்ப்பதில் அதிக நேரத்தை செல்விடுகின்றனர்.
உங்கள் எல்லோருக்கும் உர்ஃபி ஜாவேத்தை நன்றாகத்தெரியும். அவருடைய புகைப்படங்களை வைத்து என்ன செய்வீர்கள்? இது உங்கள் பரீட்சைக்கு வருமா? அல்லது நீங்கள் வேலைக்கான நேர்காணலுக்கு செல்லும் போது, நேர்காணல் செய்பவரிடம் அவளுடைய அனைத்து ஆடைகளைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும் என்று சொல்லுவீர்களா? உள்ளிட்ட பல கருத்துக்களை முன் வைத்திருந்தார்.