மேலும் அறிய
Advertisement
R Parthiepan : முதல் நாள் கூட்டமேயில்லை.. மறுநாள் டிக்கட்டே இல்லை.. பார்த்திபன் ஹேப்பி அண்ணாச்சி
R. Parthiepan : 'டீன்ஸ்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆதரவு தெரிவித்த மக்களுக்கு பரவசத்துடன் நன்றி தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளராக விளங்குபவர் ஆர். பார்த்திபன். தரமான படைப்புகள் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து கொண்டவர். இரவில் நிழல் படத்திற்கு பிறகு அவர் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'டீன்ஸ்'. மூட நம்பிக்கைக்கு எதிராக சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் 13 இளம் பருவத்தினரை வைத்து வித்தியாசமான ஒரு கதையை முயற்சி செய்துள்ளார். ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவான 'இந்தியன் 2' படம் வெளியான அதே தேதியில் தான் 'டீன்ஸ்' படமும் வெளியானது.
படத்தின் திரைக்கதையை மட்டுமே நம்பி துணிச்சலாக படத்தை வெளியிடும் பார்த்திபன் இந்த படத்தையும் அதே நம்பிக்கையில் தான் இந்தியன் 2 படத்துடன் களத்தில் மோதவிட்டார். முதல் நாள் பெரிய அளவில் வரவேற்பை பெற தவறினாலும் அடுத்தடுத்த நாட்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது பார்த்திபனின் 'டீன்ஸ்' திரைப்படம். குழந்தைகளுக்கான படம் வெளியாகி பல வருடங்கள் ஆகின்றன. அதனால் குழந்தைகளுடன் குடும்பமாக சேர்ந்து பார்க்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை குழந்தைக்குகளும் குடும்பங்களும் கொடுக்க தவறினால் நான் உயிராக நேசித்த இந்த சினிமாவைவிட்டே காணாத இடத்துக்கு மறைஞ்சு போக முடிவெடுத்து இருந்தேன். ஆனால் தற்போது நீங்கள் என்னுடைய படத்துக்கு கொடுத்துள்ள பாராட்டை பார்க்கும் போது நான் சந்தோஷத்தில் அழுவது உங்களுக்கு கேட்க வாய்ப்பில்லை என சோசியல் மீடியா போஸ்ட் மூலம் பகிர்ந்து இருந்தார் ஆர். பார்த்திபன்.
கமலின் இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் பார்த்திபனின் 'டீன்ஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த சந்தோஷத்தின் களிப்பில் தன்னுடைய படத்துக்கு ஆதரவு தந்த மக்களுக்கு நன்றி சொல்லும் வகையில் எக்ஸ் தளம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
"Thanks friends
For your unlimited love&support
நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான்!
என் கண்ணீர் மழைத்துளிப் போலத் தூய்மையானது!
நேற்று TEENZ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு கண்களை கடலாக்கியது.வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை,மறுநாள்
டிக்கட்டே இல்லை.
எத்தனை screens? எவ்வளவு collections ?
இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை.போதும் இந்த ஆனந்தக் கண்ணீர்.
கோடிகளை(2) என் கைகளில் கட்டிவிட்டாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை.
பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப் படுத்துகிறது.
தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி" தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பார்த்திபனின் இந்த போஸ்ட்டுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். உங்களை போன்ற படைப்பாளிகள் வணிக ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அடுத்த கட்டத்தை நோக்கி உற்சாகத்துடன் பயணித்து தரமான படங்களை கொடுக்க முடியும் என சொல்லி வாழ்த்தி வருகிறார்கள்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஜோதிடம்
சென்னை
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion