தமிழ் ராக்கர்ஸ் முறைகேடு - வெப் சீரிஸ் ஓ.டி.டியில் ஆகஸ்ட் 19 வெளியீடு
Arun Vijay as Rudhra : தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திரைப்படங்களை முறைகேடாக பதிவேற்றம் செய்வதையும் அதனால் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் இழப்புகள், அதற்கான குற்ற நடவடிக்கை பற்றியும் விரிவாக படமாக்கப்பட்டுள்ளது
![தமிழ் ராக்கர்ஸ் முறைகேடு - வெப் சீரிஸ் ஓ.டி.டியில் ஆகஸ்ட் 19 வெளியீடு Tamil Rockers - August 19th releases in Sony OTT தமிழ் ராக்கர்ஸ் முறைகேடு - வெப் சீரிஸ் ஓ.டி.டியில் ஆகஸ்ட் 19 வெளியீடு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/b9056e24cca23f19e1359b86214835b71659803806_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Tamil rockers: மிரட்ட வருகிறார் ருத்ரா - தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் ஆகஸ்ட் 19 வெளியாகிறது...
தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் மூலம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை முறைகேடாக பதிவேற்றம் செய்வதால் தயாரிப்பளர்கள் எப்படி எல்லாம் இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது என்பதை தெளிவாக விவரிக்கும் வெப் சீரிஸ் தான் தமிழ் ராக்கர்ஸ். இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் ஒரு இணைய தொடர் ஒன்றில் ருத்ரா என்ற கதாபத்திரத்தில் கம்பீரமாக நடித்துள்ளார்.
வெப் சீரிஸ் மைய கதை என்ன?
சோனி ஓ.டி.டியில், தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ்சை ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகிறது. இந்த அறிவிப்பை ஏ.வி.எம் நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் எவ்வாறு திரைப்படங்களை முறைகேடாக பதிவேற்றம் செய்கிறார்கள் மற்றும் அவர்கள் இந்த செயலால் திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் இழப்புகள் என்னென்ன பற்றியும் அதற்கான குற்ற நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது விரிவாக படமாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
View this post on Instagram
ஆகஸ்ட் 19ம் தேதி ஓ.டி.டியில் வெளியீடு:
இந்த சீரிஸிற்கான டீஸர் சமீபத்தில் தான் வெளியானதை அடுத்து ட்ரைலரும் வெளியாகி மக்களின் மத்தியில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 19ம் தேதி ஓ.டி.டியில் வெளியாக இருக்கும் இந்த இணைய தொடரில் காவல் துறை அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார் அருண் விஜய். அவருடன் வாணி போஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Get ready to meet #Rudhra!!#Tamilrockerz - A #SonyLIV Tamil web series... Streaming from Aug 19th.#TamilrockerzOnSonyLIV @dirarivazhagan @avmproductions @arunaguhan_ pic.twitter.com/pVfQcASHXd
— ArunVijay (@arunvijayno1) August 6, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)