மேலும் அறிய

Gokulashtami 2023: ”கோகுலத்து கண்ணா.. கண்ணா” .. மெய் சிலிர்க்க வைக்கும் கிருஷ்ணர் பற்றிய சினிமா பாடல்கள்..!

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணா அவதாரம் அற்புதங்களும் லீலைகளும் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் கடவுள் கிருஷ்ணர் குறித்து இடம் பெற்ற பாடல்களை காணலாம். 

கிருஷ்ண ஜெயந்தி விழா

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணா அவதாரம் பல அற்புதங்களும் லீலைகளும் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்தது. கம்சனையும், சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு இந்த அவதாரம் எடுக்கப்பட்டதாக புராணங்கள் சொல்கிறது. இத்தகைய சின்னக் கண்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர். இதனால் அஷ்டமி திதிக்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் தொடங்கி நடைபெறும். பகவான் கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் வட இந்தியாவில் சில மாநிலங்களில் நேற்றும், தமிழகத்தில் இன்றும் இந்த விழா கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமாவில் கிருஷ்ணர் பாடல்கள்

இதனிடையே தமிழ் சினிமாவில் கடவுள் கிருஷ்ணர் குறித்து படங்களும், பாடல்களும்  பல வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 

  •   கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா..கிருஷ்ணா (தெய்வமகன்)

1969 ஆம் ஆண்டு வெளியான தெய்வ மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 3 வேடங்களில் நடித்திருந்தார். இதில் ஒரு சிவாஜி பாடும் பாடலாக “கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா” பாடல் இடம் பெற்றது. 

<

  •  கோபியர் கொஞ்சும் ரமணா (திருமால் பெருமை)

1968 ஆம் ஆண்டு வெளியான திருமால் பெருமை படத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, பத்மினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கோபியர் கொஞ்சும் ரமணா என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. 

  •  கங்கை கரை தோட்டம் (வானம்பாடி)

1963 ஆம் ஆண்டு வெளிவந்த வானம்பாடி  படத்தில்  எஸ். எஸ். ராஜேந்திரன், தேவிகா, ஆர். முத்துராமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.  இந்த படத்தில் இடம் பெற்ற “கங்கை கரை தோட்டம்” பாடல் மிகவும் பிரபலமானது.

4. கண்ணன் வந்தான் (ராமு)

1966 ஆம் ஆண்டு வெளிவந்த ராமு  திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.  இந்த படத்தில் கண்ணன் வந்தான் என்னும் பாடல் இடம் பெற்றிருந்தது.

5. உள்ளத்தில் நல்ல உள்ளம் (கர்ணன்)

1964 ஆம் ஆண்டு வெளிவந்த  கர்ணன் திரைப்படத்தில்   சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ் , அசோகன் , ஆர்.முத்துராமன் , சாவித்திரி , தேவிகா உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘கர்ணன்’. இதில் இடம் பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் இன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது.

6. கண்ணா கருமைநிற கண்ணா (நானும் ஒரு பெண்)

1963 ஆம் ஆண்டு வெளியான நானும் ஒரு பெண் படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ரங்கா ராவ், நாகேஷ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் கண்ணா கருமைநிற கண்ணா என்ற பாடல் இடம் பிடித்தது. 

7. நீல நிற மேகமெல்லாம் (திருமலை தெய்வம்)

 1973 ஆம் ஆண்டு வெளியான திருமலை தெய்வம் படத்தில் ஜெமினி கணேசன், கே. பி. சுந்தராம்பாள், டி. ஆர். மகாலிங்கம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் நீல நிற மேகம் என்னும் பாடல் கிருஷ்ணரை மையாமாக வைத்து எழுதப்பட்டது. 

8. கோகுலத்து கண்ணா கண்ணா (கோகுலத்தில் சீதை)

 1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் கார்த்திக், சுவலட்சுமி, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்த படம் “கோகுலத்தில் சீதை”. இந்த படத்தில் இடம் பெற்ற கோகுலத்து கண்ணா கண்ணா பாடல் மிக பிரபலமடைந்தது. 

9. முகுந்தா முகுந்தா ( தசாவதாரம்)

2008 இல் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த  தசாவதாரம் படத்தில் கமல் பத்து மாறுபட்ட வேடங்களில் நடித்து அசத்தினார். இப்படத்தில் அசின்  ஹீரோயினாக நடித்த நிலையில், இதில் முகுந்தா முகுந்தா பாடல் இடம் பெற்றிருந்தது. 
 
10. யமுனை ஆற்றிலே (தளபதி)

1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, ஷோபனா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலரும் நடித்த படம் “தளபதி”. இதில் இடம் பெற்ற யமுனை ஆற்றிலே பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

11. ஆயர் பாடி மாளிகையில் ( கிருஷ்ணர் பக்தி பாடல்கள்)

12. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (கிருஷ்ணர் பக்தி பாடல்கள்)

13. கண்ணா நீ தூங்கடா ( பாகுபலி 2)

2017 ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி 2 தி கன்க்ளூஷன் படத்தில் “கண்ணா நீ தூங்கடா” பாடல் இடம் பெற்றிருந்தது. 

14. கோகுலத்து பசுக்கள் (கிருஷ்ணர் பக்தி பாடல்கள்)

15. கோகுலத்தில் ஒருநாள் (கிருஷ்ணர் பக்தி பாடல்கள்)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!DMK Vs TVK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
Embed widget