500 ஏக்கர் நிலம் , அரண்மனை போல் வீடு...எல்லாம் இழந்து நிற்கும் நகைச்சுவை நடிகர் சத்யன்..சினிமாவால் தான் எல்லாமா?
பிரபல தமிழ் காமெடி நடிகரான சத்யன் தனது சொத்துக்கள் அனைத்தையும்ம் இழந்து நிற்பதாக. அவரைப் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது

சொத்துக்களை இழந்து நிற்கும் நடிகர் சத்யன்
பிரபல காமெடி நடிகர் சத்யன் பற்றிய தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களால் நகைச்சுவை நடிகராக பரவலாக அறியப்பட்டு நடிகர் சத்யன் தனது குடும்ப சொத்துக்களை இழந்து சொந்த வீடு கூட இல்லாமல் தற்போது நண்பர்களின் உதவியில் சென்னையில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காமெடி நடிகர் ஆனது எப்படி
கோயம்புத்தூரில் மாதம்பட்டிதான் நடிகர் சத்யனின் சொந்த ஊர். சத்யன் தனது தந்தைக்கு ஒரே மகனாவார். 500 ஏக்கரில் நிலம் , அரண்மனை போல் வீடு என அவரது சொத்துக்கள் மட்டுமே 500 கோடிக்கு மேல் இருக்கும். சினிமாவின் மேல் ஆர்வம் கொண்ட சத்யனின் தந்தை தனது மகனை நாயகனாக வைத்து இரு படங்களை தயாரித்தார். இரு படங்களும் தோல்வியடையவே தனது சொத்துக்களை விற்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளார் சிவகுமார். 2000 ஆம் ஆண்டு வெளியன இளையவன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானர்வர் நடிகர் சத்யன். தொடர்ந்து 'கண்ணா உன்னை தேடுகிறேன்' என்கிற படத்திலும் நாயகனாக நடித்தார். இந்த இரண்டு படங்க்ளும் சரியாக போகாததால் காமெடி பக்கம் கவனத்தை செலுத்தினார் சத்யன் . சூர்யாவின் மாயாவி படம் அவரை ஒரு காமெடி நடிகராக அடையாளம் காட்டியது. ரெளத்திரம் , வேட்டைக்காரன் , நண்பன் என 50 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
சத்யராஜின் உறவினர்
சத்யன் நடிகர் சத்யராஜ் இவரது சொந்தக்காரர் என்பது குறிப்பிடத் தக்கது. சத்யனின் தந்தை சிவகுமாரின் அத்தை மகன் தான் சத்யராஜ். சத்யராஜ் சினிமாவிற்கு வர அவரது குடும்பம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சத்யனின் தந்தைதான் சத்யராஜூக்கு ஆதரவளித்து அவரை சினிமாவில் நடிக்க ஊக்குவித்தார். சினிமாவில் பணத்தை இழந்தது மட்டுமில்லாமல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் எல்லாம் சேர்ந்து சொந்த வீடு கூட இல்லாமல் சத்யன் சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சமீப காலத்தில் சத்யன் எந்த படத்திலும் நடிக்காததற்கு அவரது குடும்ப சூழலே காரணம் என்றும் கூறப்படுகிறது. தனது ஊரில் ஜமீன்தார் மாதிரி வாழ்ந்து வந்த சத்யன் சினிமா மீது ஆசை ஏற்பட்டதால் இன்று ஒரு சராசரியான வாழ்க்கையை வசித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.





















