Vignesh Shivan about Dhoni: “36 முறை.. கைவிட்டு எண்ணினேன்” - தோனி குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி அப்டேட்!
தோனியை இயக்கியது தொடர்பாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் சமீபத்தில் தன்னுடைய ஐகான் வீரர் தோனியுடன் இருப்பது போல் ஒரு படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் சிஎஸ்கே அணிக்காக ஒரு வீடியோ இயக்கியதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் விதகமாக தற்போது பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை செய்துள்ளார். அதில், “சில ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய அம்மா ஐபிஎல் தொடர் நடைபெறும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு வீரர்கள் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் அவர் ஒரு முறை பிராவோ இடம் தமிழில் பேசினார். அவர் பணியில் இருக்கும் போது அவரிடம் கேட்டு நானும் பார்க் ஷெராடன் ஹோட்டலின் ஒரு மூலையில் நின்று கொண்டு என்னுடைய ஐகான் வீரர் தோனியை பார்த்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் அவரை நான் ஃபாலோ செய்துள்ளேன்.
View this post on Instagram
என்னுடைய வெற்றி, தோல்வி, ஷூட்டிங் நேரம் ஆகிய அனைத்திலும் நான் தோனியை நினைவு கொண்டிருக்கின்றேன். அவர் இந்த இடத்தில் இருந்திருந்தால் எப்படி இந்த சூழலை கையாண்டிருப்பார் என்று நினைத்து பார்த்திருக்கின்றேன். 100 பேர் கொண்ட ஆட்களுடன் வேலை செய்யும் போது நிச்சயம் ஒரு தலைமை பண்பு வேண்டும். அதற்கு நான் எப்போதும் என்னுடைய ஐகான் தோனியை பின்பற்றுவேன்.
நான் ஓட்டலில் நின்று கொண்டிருக்கும் போது சில நாட்கள் ஏன் இந்த பஸ் கொஞ்சம் தள்ளி பார்கிங் செய்யட்டிருக்காலமே என்று யோசிப்பேன். ஏனென்றால் நான் தோனியை நீண்ட நேரம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒருநாள் என்னுடைய அம்மா தோனியை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். அத்துடன் அவர் தோனியுடன் ஒரு படத்தையும் எடுத்து கொண்டார். ஆனால் என்னை தோனியுடன் படம் எடுக்க அழைத்து செல்லவில்லை. அப்போது இருந்து என்னுடைய வாழ்வில் ஒரு முறையாவாது தோனியை நேரில் பார்த்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.
சில நல்ல மனிதர்களின் ஆசியால் என்னுடைய வேலையின் வழியாக கடைசியாக என்னுடைய ஐகான் வீரரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிஎஸ்கே அணிக்காக ஒரு வீடியோவை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதில் என்னுடைய ஐகான் வீரர் தோனியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வீடியோவிற்காக நான் 36 முறை தோனியிடம் ஆக்ஷன் என்று கூறினேன். இவை அனைத்தையும் என்னுடைய கைவிட்டு எண்ணி கொண்டே இருந்தேன்.
அந்த வீடியோ ஷீட்டிங்கின் இடைவேளையில் என்னுடைய அம்மா தோனியுடன் எடுத்த படத்தை அவருக்கு காட்டினேன். அதன்பின்னர் என்னுடைய அம்மாவை நேரில் அழைத்து வந்து அவருடன் சந்திக்க வைத்தேன். ஒரு 10 நிமிடங்கள் அவர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர். அப்போது தோனி ஒரு எளிமையான மனிதரை போல் நடந்து கொண்டார். அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் என்னுடைய வாழ்வில் மிகவும் சிறப்பான தருணங்களாக அமைந்திருந்தது. என் நீண்ட நாள் கனவு ஆசை நிறைவேறியது” எனப் பதிவிட்டுள்ளார்.