Tamannaah Bhatia: விஜய் வர்மாவுடன் ”அந்த” காட்சிகள்.. எப்படி இருந்தது? மனம் திறந்த நடிகை தமன்னா
Tamannaah Bhatia: பிரபல நடிகை தமன்னா இந்தியில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2ம் பாகத்தில் தனது காதலர் விஜய்வர்மாவுடன் நடித்துள்ளார்.
தமன்னா பாட்டியாவும் விஜய் வர்மாவும் நெட்ஃபிளிக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடரான 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' வெப் சீரீஸ்க்கான ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வோரு பேட்டியின் போதும் அதன் பின்னரோ அல்லது அதன் முன்போ சில சர்ப்ரைஸான தகவல்களை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். ஏற்கனவே லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய்வர்மாவுடன் படுக்கையறை காட்சிகள்:
இந்நிலையில், தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், லஸ்ட் ஸ்டோரீஸ் சீரியஸில் நடிப்பதற்கு விஜய் வர்மா மிகவும் உதவியாக இருந்தார். குறிப்பாக, படுக்கை அறைக் காட்சிகளில் நடிக்கும் போது என்னை மிகவும் சௌகரியமாக உணரவைத்தார். அதனால் தான் படுக்கை அறைக் காட்சிகளில் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடிக்க முடிந்தது எனக் கூறினார்.
படுக்கை அறைக் காட்சிகளில் நடிக்கும் போது நம்முடன் நடிக்கும் நடிகரின் ஒத்துழைப்பு நமக்கு மிகவும் முக்கியம். அப்போது தான் இயக்குநர் எதிர்பார்த்தபடி நடிக்க முடியும். விஜய் வர்மா அந்த வகையில் எனக்கு மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் படுக்கை அறைக் காட்சிகளில் மிகவும் பாதுகாப்பாக உணரும் போது தான் நம்மால் கதைக்கு ஏற்ற வகையில் நடிக்க முடியும் எனவும், நான் இதற்கு முன்னர் ஒரு நடிகரிடம் இவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்ததில்லை. அதுதான் ஒரு நடிகருக்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையான பாதுகாப்பை நீங்கள் உணர வேண்டும். விஜய் வர்மா அதை மிகவும் எளிதாக உணரச் செய்தார் என கூறியுள்ளார்.
மேலும் அந்த பேட்டியில், “ விஜய் வர்மாவை தான் நீண்ட காலமாக கவனித்து வருவதாகவும், அவரது கதைத் தேர்வு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும்ய, இவ்வளவு திறமையான நடிகருடன் நடிக்க வேண்டும் என தான் ஆசைப்பட்டதாகவும், குறிப்பாக லஸ்ட் ஸ்டோரீஸில் நடிப்பதற்கு விஜய் வர்மாவும் ஒரு காரணம்” என கூறினார்.
விஜய் வர்மாவுடன் காதல்:
இதற்கு முன்னர் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக நடிகை தமன்னா தெரிவித்திருந்தார். தங்களுக்கு இடையேயான இந்த உறவானது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 சீரிஸின் படப்பிடிப்பின் போது தொடங்கியதாக கூறியிருந்தார் . தமன்னா - விஜய் வர்மா முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென்சர்மா, ஆர் பால்கி மற்றும் சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இணையத்தில் பரவிய வீடியோ:
தமன்னாவும், விஜய் வர்மாவும் கோவாவில் நடந்த புத்தாண்டு விருந்தில் முத்தமிட்டுக் கொண்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதனால், அவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால், இதுதொடர்பாக இருவருமே எந்தவித கருத்தும் கூறாமல் இருந்தனர். அதேநேரம், மும்பையில் அடிக்கடி ஜோடியாக வலம் வந்தனர். இதையடுத்து இருவரும் காதலிக்கிறீர்களா என கேட்டபோது, "நாங்கள் ஒன்றாக ஒரு படம் நடித்துள்ளோம். இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அவை அனைத்தையும் தெளிவுபடுத்துவது அவசியமில்லை" என்று தமன்னா பதிலளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.