மேலும் அறிய

Susi Ganesan | படத்தில் நடிக்கணுமா?... இதை செய்யுங்க - சுசி கணேசனின் அறிவிப்பு..

நடிப்பில் ஆர்வமுள்ள 20 முதல் 40 வயது உள்ளவர்கள் தங்கள் வீடியோக்களை 4vmaxtv.com என்ற இணையதளத்தில் பதிவிடலாம் - சுசிகணேசன்

இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்த சுசிகணேசன் விரும்புகிறேன், ஃபைவ் ஸ்டார், திருட்டுப் பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் திருட்டுப் பயலே பலரது வரவேற்பை பெற்றது. சுசி இறுதியாக 2017ஆம் ஆண்டு  பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா உள்ளிட்டோர் வெளியான ‘திருட்டுப் பயலே 2’ படத்தை இயக்கியிருந்தார்.

சமீபத்தில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை சுசி கணேசன் வெளியிட்டிருந்தார். ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கிடையே,‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தின் இசையமைப்பாளராக இளையராஜாவை சுசி கணேசன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம் முதல் முறையாக இளையராஜாவுடன் சுசி கணேசன் இணையவுள்ளார். இதற்காக இயக்குநர் சுசிகணேசன் மும்பையிலிருந்து சென்னை வந்து இளையராஜாவைச் சந்தித்துப் பேசி இளையராஜாவுக்கான முன் பணத்தையும் சமீபத்தில் கொடுத்தார்.


Susi Ganesan | படத்தில் நடிக்கணுமா?... இதை செய்யுங்க - சுசி கணேசனின் அறிவிப்பு..

இந்நிலையில், படக்குழுவினருடன் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “புதுமுகங்களை 'வஞ்சம் தீர்த்தாயடா' படத்தில் நடிக்க வைக்க இருக்கிறோம்.  நடிப்பில் ஆர்வமுள்ள 20 முதல் 40 வயது உள்ளவர்கள் தங்கள் வீடியோக்களை 4vmaxtv.com என்ற இணையதளத்தில் பதிவிடலாம்” என கேட்டுக்கொண்டார்.

 

முன்னதாக இளையராஜவை சந்தித்தது குறித்து பேசிய சுசிகணேசன், “கிராமத்து வாழ்க்கையில் ஊருணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப்போல இளையராஜாவின் இசையையும் உணவாக உண்டு வளர்ந்தவன் என்ற முறையில் எனது ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திற்கு அவர் இசையமைப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்.

என்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று நான் கண்ட கனவு தற்போது நான் முதன்முதலாகத் தயாரிக்கும் படத்தில் நிறைவேறியுள்ளது. இப்படம் 1980களில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளது” என கூறியிருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

தளபதி படத்தில் இருந்து வந்த பெயர்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தளபதி படத்தில் இருந்து வந்த பெயர்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
ரூமுக்கு வந்தா வாய்ப்பு தர்றேன்.. பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. தென்னிந்திய சினிமாவுக்கு கும்பிடு!
ரூமுக்கு வந்தா வாய்ப்பு தர்றேன்.. பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. தென்னிந்திய சினிமாவுக்கு கும்பிடு!
சம்பவம் செய்த கார்த்திக் சுப்பராஜ்...சத்தமில்லாமல் ஒதுங்கிய மோகன் ஜி
சம்பவம் செய்த கார்த்திக் சுப்பராஜ்...சத்தமில்லாமல் ஒதுங்கிய மோகன் ஜி
Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!
Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget