மேலும் அறிய

Cinema Round-up: வாரிசுக்கு துணிவு கொடுத்த பதிலடி; சுஷாந்த் சிங் வழக்கில் திருப்பம்; அவதார் வசூல்! - டாப் 5 சினிமா செய்திகள்!

கோலிவுட்டில் துணிவு வாரிசு, பாலிவுட்டில் சுஷாந்த சிங் சர்ச்சை, ஹாலிவுட்டில் அவதார் 2 பாக்ஸ் ஆஃபிஸ் என வரிசை கட்டி நிற்கும் டாப் 5 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

கொலை செய்யப்பட்டாரா சுஷாந்த் சிங் ?

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி தோனியின் பயோபிக் படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடத்திலும் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையிலுள்ள பாந்த்ரா இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

Cinema Round-up: வாரிசுக்கு துணிவு கொடுத்த பதிலடி; சுஷாந்த் சிங் வழக்கில் திருப்பம்; அவதார் வசூல்! - டாப் 5 சினிமா செய்திகள்!

தற்போது, சுஷாந்த் சிங் உடலுக்கு உடற்கூராய்வு செய்த அறையில் இருந்தவரின் வாக்குமூலம், அது தொடர்பான வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூராய்வுக்காக அவர் உடல் கொடுக்கப்பட்டபோது, அதில், காயங்கள் போன்று பல அடையாளங்கள் காணப்பட்டன என அவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூராய்வின் படி, சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

7000 கோடியை வசூல் செய்த அவதார்

Cinema Round-up: வாரிசுக்கு துணிவு கொடுத்த பதிலடி; சுஷாந்த் சிங் வழக்கில் திருப்பம்; அவதார் வசூல்! - டாப் 5 சினிமா செய்திகள்!

படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ரூ.7,000 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பான தனியார் நிறுவன அறிக்கையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அந்த திரைப்படம் 855.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. அந்த மொத்த தொகையில் 601.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு சந்தையில் வசூலாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது.

துணிவு பட ப்ரோமோஷன் 

நேற்று துணிவு படத்தின் ப்ரோமோஷன் வீடியோ ஒன்று வெளியானது. இதில், ஸ்கை டைவிங் செய்யும் கலைஞர்கள் சிலர், ஹெலிகாப்டரில் இருந்து குதித்து துணிவு படத்தின் போஸ்டரை வானத்தில் பறக்கவிட்டனர். 

அந்த போஸ்டரில்,  “31 ஆம் தேதி டிசம்பர் - துணிவு டே ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாளில் டீசர் வருமா..? ட்ரெயலர் வருமா..? அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சி நடைபெறுமா..? என்பது தெரியவில்லை. அதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. 

வாரிசு இசை வெளியீட்டு விழா ப்ரோமோ 

வாரிசு படத்தின் இசை நிகழ்ச்சியை நேரில் சென்று காணமுடியவில்லை என பலரும் வருதப்பட்டனர். அவர்களின் கவலையை போக்குவதற்காக, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வருகிற ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 ஆம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் தற்போது வெளியாகிவுள்ளது.

முதல் ப்ரோமோவில், நடிகர் விஜய் ரஞ்சிதமே பாடலை பாடி கொண்டு ஆடுகிறார். பின், செல்ஃபி வீடியோவை எடுத்த அவர், தனக்கு ட்வீட் செய்ய தெரியாது என்றும்,  அட்மினை அழைக்கட்டுமா என்றும் கேட்டார். இரண்டாவது ப்ரோமோவில், ராஷ்மிகா நடனமாடுகிறார். “எவ்வளோ க்யூட்டு.. ஐ லைக் யூ” என்று ராஷ் விஜயை பார்த்து கூறினார்.

சமந்தாவின் புதிய பதிவு 

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

சமந்தாவின் உடல்நிலை சற்று சரியில்லாத நிலையில், அவர்  நண்பரான ராகுல், அவரை இரும்பு பெண் என குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, “ உங்களில் கடினமான போராடுபவர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன். தொடர்ந்து போராடுங்கள்... நாம் முன்பை விட பலமாக ஆகுவோம்... என்றென்றும் பலமாக இருப்போம்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
Embed widget