மேலும் அறிய

கல்லூரியில் கருப்பு பட ஆடியோ லாஞ்ச்...கல்விநிலையத்தில் சினிமா பிரச்சாரமா! சூர்யாவின் அன்பான ரசிகர்கள் கேளுங்க

கல்வி நிலையங்களில் சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடத்துவது சர்ச்சைக்குரிய பேசுபொருளாகி வரும் நிலையில் சூர்யாவின் கருப்பு படத்தின் ஆடியோ லாஞ்ச் கல்லூரியில் நடக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சூர்யாவின் கருப்பு படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி  மதுரை சோலைமலை கல்லூரியில் நடக்கவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அண்மைச் சூழலில் கல்வி நிலையரங்களில் திரைப்பட ப்ரோமோஷன்கள் நடத்துவது குறித்து  நிறைய விவாதங்கள் நடந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு சூர்யா மீது விமர்சனங்களை திருப்பியுள்ளது. 

கல்லூரியில் கருப்பு பட ஆடியோ லாஞ்ச்

ப்ரிண்ட் மீடியா தவிர்த்து சினிமாத் துறை சமூக வலைதளங்களை பெரியளவில் தங்களது திரைப்படங்களின் ப்ரோமோஷன்களுக்காக சார்ந்திருக்கிறது. அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பிரபலம் இல்லாத ஒரு படத்தை பார்ப்பது அறிதாகிவிட்டது. அதே போல் எல்லா படங்களின் ப்ரோமோஷன்களையும் இப்போது பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் செய்து வருகிறார்கள். அதே போல் திரைப்பட நிகழ்ச்சிகளை முடிந்த அளவிற்கு மாணவர்கள் மத்தியில் நடத்தி அந்த படத்தை நடிகர்கள் ப்ரோமோ செய்கிறார்கள். கல்வி நிலையங்களில் திரைப்படம் ப்ரோமோஷன்கள் செய்வதை சமூக அக்கறையுள்ள சிலர் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்கள். தனது படங்களை படிக்கும் மாணவர்களிடம் ப்ரோமோட் செய்ய மாட்டேன் என நடிகர் சசிகுமார் வெளிப்படையாக நிலைப்பாடு எடுத்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் கல்லூரியில் நடந்ததும் விமர்சனத்திற்குள்ளாது . அதனைத் தொடர்ந்து அடுத்து சூர்யாவின் கருப்பு படத்தின் இசை வெளியீடு கல்லூரியில் நடக்கவிருக்கிறது. கல்வி தொடர்பான பல முன்னெடுப்புகளை எடுத்துள்ள சூர்யா இது குறித்து படக்குழுவிடம் பேசியிருப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கருப்பு. இப்படம் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நீண்ட காலத்திற்கு பிறகு ரூரல் மாஸ் ஹீரோவாக சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார். இது தவிர்த்து த்ரிஷா , சாய் அப்யங்கரின் இசை என ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி  மதுரை சோலைமலை கல்லூரியில்  இப்படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget