மேலும் அறிய

“காதல் மட்டும் போதாது..” 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து சூர்யா - ஜோதிகா சொல்வது என்ன?

காதல் தவிர்த்து ஒரு ஆரோக்கியமான திருமண வாழ்க்கையை வைத்துக்கொள்ள நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா கடைபிடிக்கும் முக்கிய அம்சங்கள்

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக அறிமுகமாகி, பின்னர் வாழ்க்கைத் துணையாக இணைந்தவர்கள் சூர்யா - ஜோதிகா. கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள், 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நிறைவு செய்துள்ளனர். இதனை முன்னிட்டு இருவரும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தங்களது திருமண உறுதிமொழிகளை மீண்டும் புதுப்பித்துள்ளனர். அவர்களது குழந்தைகள் தியா, தேவ் உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.


“காதல் மட்டும் போதாது..” 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து சூர்யா - ஜோதிகா சொல்வது என்ன?

கோலிவுட்டின் பல்வேறு நட்சத்திரங்களில் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்து போகும் நிலையில் 20 ஆண்டுகாலம் சூர்யா ஜோதிகா தங்களது திருமண வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்து வருகிறார்கள். ஒரு ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு முக்கியமான பல்வேறு விஷயங்களை இருவரும் பலமுறை பேசியிருக்கிறார்கள். மிக முக்கியமான அம்சங்களாக அவர்கள் இவற்றை குறிப்பிடுகிறார்கள்

திருமணத்தை விட முக்கியமானது நட்பு


“காதல் மட்டும் போதாது..” 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து சூர்யா - ஜோதிகா சொல்வது என்ன?

அதில் தொடர்ந்து இடம்பெற்ற ஒரு கருத்து, “கணவன் - மனைவியாக இருப்பதைவிட நல்ல நண்பர்களாக இருப்பது” என்பதே

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் தங்களுக்குள் நட்பு தொடர்வதற்கு ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதும், தனிப்பட்ட இடத்தை மதிப்பதும் முக்கியம் என்று இருவரும் தெரிவித்துள்ளனர். ஒரே வீட்டில் இருப்பது மட்டுமல்லாமல், ஒருவருடைய எண்ணங்களையும் விருப்பங்களையும் மற்றொருவர் புரிந்துகொள்வதே உறவை வலுப்படுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சண்டைகள் வந்தாலும் உறவு இன்னும் நெருக்கமாகும்


“காதல் மட்டும் போதாது..” 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து சூர்யா - ஜோதிகா சொல்வது என்ன?

எந்த திருமணத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்பதை சூர்யா - ஜோதிகா இருவரும் மறைத்ததில்லை. தங்களுக்குள்ளும் சண்டைகள் வருவதாகவும், ஆனால் அந்த சண்டைகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதாகவும் சூர்யா கூறியிருக்கிறார்.

தினமும் ஒரு காபி.. தவறாமல் வரும் ‘Missing you’ மெசேஜ்


“காதல் மட்டும் போதாது..” 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து சூர்யா - ஜோதிகா சொல்வது என்ன?

தங்களது அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிறிய விஷயங்களையும் ஜோதிகா பேட்டிகளில் பகிர்ந்துள்ளார். இருவரும் காலையில் ஒன்றாக காபி குடிப்பதை விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வேலை காரணமாக ஒருவரால் அந்த நேரத்தில் வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், மற்றொருவருக்கு “Missing you” என குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கம் இருப்பதாகவும் ஜோதிகா கூறியுள்ளார். பெரிய விஷயங்களை மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையின் சிறிய தருணங்களையும் பகிர்ந்துகொள்வது தங்களது உறவில் முக்கியமானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோதிகாவின் சினிமா பயணத்தில் சூர்யாவின் ஆதரவு


“காதல் மட்டும் போதாது..” 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்து சூர்யா - ஜோதிகா சொல்வது என்ன?

திருமணத்துக்குப் பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இந்த முடிவில் சூர்யா தனக்கு அளித்த ஆதரவை அவர் பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் நடிக்க வேண்டும் என்று தன்னை ஊக்கப்படுத்தியதுடன், தான் தேர்வு செய்யும் கதைகளில் தன்னுடைய முடிவுகளை மதித்து சூர்யா துணையாக இருந்ததாகவும் ஜோதிகா தெரிவித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகும் தனது தனிப்பட்ட கனவுகளையும் தொழில் முடிவுகளையும் தொடர்வதற்கு அவர் கொடுத்த சுதந்திரம் முக்கியமானது என்றும் ஜோதிகா கூறியிருக்கிறார்.

“என்னுடைய இடத்தை அவர் மதிக்கிறார்”

திருமண வாழ்க்கையில் சமத்துவம் முக்கியம் என்பதை ஜோதிகா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். வீட்டில் இருவரும் சமமானவர்கள் என்ற எண்ணம் சூர்யாவிடம் இருப்பதாகவும், தனது தொழில் மற்றும் தனிப்பட்ட முடிவுகளில் அவர் தலையிடாமல் அவற்றை மதிப்பதாகவும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.

“திருமணம் என்பது Balance”

குழந்தைகள் பிறந்த பிறகு வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை எப்படி சமநிலைப்படுத்துகிறார்கள் என்பதையும் ஜோதிகா வெளிப்படையாக பேசியுள்ளார்.

சூர்யா படப்பிடிப்புக்காக வெளியில் செல்லும் நேரங்களில் தான் குழந்தைகளுடன் இருப்பதாகவும், தான் படப்பிடிப்பில் இருக்கும்போது சூர்யா குழந்தைகளை கவனிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணம் என்பது ஒருவரை ஒருவர் ஆதரிப்பது மட்டுமல்ல; இருவரும் தங்களது பொறுப்புகளை பகிர்ந்துகொள்வது என்றும் ஜோதிகா கூறியுள்ளார். அதனால் தான் “திருமணம் என்பது balance” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

தனது தவறுகளையும் ஒப்புக்கொண்ட சூர்யா

குடும்ப வாழ்க்கை குறித்து பேசும்போது, தனது தரப்பிலிருந்த குறைகளையும் சூர்யா வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். குழந்தைகள் சிறியவர்களாக இருந்த காலத்தில் வேலை காரணமாக அதிக நேரம் வீட்டில் இருக்க முடியவில்லை என்றும், அந்த காலகட்டத்தில் ஜோதிகாவுக்கு தேவையான அளவு துணையாக இருக்கவில்லை என்பதை பின்னர் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே குடும்பத்திற்கான பங்களிப்பு அல்ல என்றும், குழந்தைகளை வளர்ப்பது மற்றும் குடும்பப் பொறுப்புகளில் இருவரும் பங்கேற்பது அவசியம் என்றும் சூர்யா கூறியிருக்கிறார்.

“காதலும் புரிதலும் முக்கியம்”

20 ஆண்டுகால திருமண வாழ்க்கையின் அடிப்படை குறித்து சூர்யாவிடம் கேட்கப்பட்டபோது, காதலும் புரிதலும் முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் சூழ்நிலைகள் மாறும்போது அதற்கேற்ப கற்றுக்கொள்ள வேண்டும் என சூர்யா தெரிவித்துள்ளார்

ஜோதிகாவைப் பொறுத்தவரை, காதலுடன் சேர்ந்து மரியாதையும் ஒருவரை ஒருவர் பாராட்டுவதும் முக்கியம். துணையின் முடிவுகளை மதிப்பதும், அவருக்கான தனிப்பட்ட இடத்தை கொடுப்பதும் நீண்டகால உறவில் முக்கியமானதாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

“அமைதியாக இருங்கள்.. கேளுங்கள்”

திருமணமான ஆண்களுக்கு சூர்யா சமீபத்தில் வழங்கிய நகைச்சுவையான அறிவுரையும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. வீட்டில் அமைதி நிலவுவதற்கான முதல் விதி என்ன என்று கேட்கப்பட்டபோது, “அமைதியாக இருங்கள். கேளுங்கள். பேசாதீர்கள்” என்றார்.

அதே நேரத்தில், இது வெறும் நகைச்சுவையான பதில் மட்டுமல்ல என்றும் சூர்யாவின் பல பேட்டிகளில் தெரிகிறது. துணையை கேட்பதும், புரிந்துகொள்வதும், அவருடைய கருத்துக்கு மதிப்பு கொடுப்பதும் திருமண வாழ்க்கையில் முக்கியம் என்ற கருத்தை அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2: இங்க நான்தான் கிங்..
Jailer 2: இங்க நான்தான் கிங்..". ஓடிடி-யிலும் சக்கைப் போடு போடும் ஜெயிலர் 2! குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிதான்!
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
Embed widget