மேலும் அறிய

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை..வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள்!

சர்ரகஸி எனப்படும் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பிரபலங்களின் லிஸ்ட்...

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் எனக்கூறுப்படும் நயன்தாராவை சமீபத்தில் திருமணம் செய்து கெண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கங்களில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், நயன்தாராவும் தானும் பெற்றோர்கள் ஆகிவிட்டதாகவும், அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு சிலர் மகிழ்ச்சி தெரிவித்தாலும் ஒரு சிலரோ, குழந்தை எப்படி பிறந்தது என கேள்வியெழுப்பி வருகின்றனர். இதற்கு விக்னேஷ் சிவனோ, நயன்தாராவோ குழந்தை எப்படி பிறந்தது என்பதற்கு விளக்கம் கொடுப்பதற்கு முன்னரோ ஒரு சிலர் “அது எப்படி அதற்குள்..?” எனவும் “ஒரு வேளை சர்ரகஸி மூலம் குழந்தை பெற்றிருப்பரோ..?” எனவும் கமென்ட் அடித்து வருகின்றனர். உண்மையில் சர்ரகஸி என்றால் என்ன?

வாடகைத் தாய் மூலம் குழந்தையா? எப்படி?

சர்ரகஸி என்பது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை. இந்த வாடகைத் தாயை ‘சர்ரகேட்’(Surrogate) என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். வாடகைத் தாய் முறை என்பது, ஒரு நபர் இன்னொரு நபருக்கு பதிலாக குழந்தையை சுமந்து பெற்றுக் கொடுப்பதேயாகும். திருமணமான சிலர் அல்லது சேர்ந்து வாழும் சிலர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பி சில காரணங்களால் அதற்கு தடை ஏற்பட்டிருக்கும். அப்படி அவர்களால் குழந்தை பெற இயலாமல் இருப்போர் சர்ரகஸிக்கு தயாராக இருக்கும் வாடகைத் தாயை நாடி அவர்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வர். தன் பாலின ஜோடிகள், சிங்கிள் பேரண்டாக இருந்து குழந்தையை வளர்க்க விரும்புபவர்கள், குழந்தை பெற சாத்தியக் கூறுகள் இல்லாதவர்கள் என பலரும் இந்த முறை மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம். 

குழந்தையை சுமக்கும் வாடகைத் தாய்க்கும் பெற்றோருக்கும் இடையே சில விதிமுறைகள் மற்றும் நிபந்தைனகளுடன் ஒப்பந்தம் போடப்படும். குழந்தையை சுமக்கும் பெண்ணிற்கு தேவையான செலவுகள மற்றும் அவரது உடல் நிலை குறித்த விஷயங்ள் அந்த ஒப்பந்தத்தில இடம் பெற்றிருக்கும். குழந்தை பிறந்த பிறகு வாடகைத் தாயிடமிருந்து பெற்றோரிடத்தில் அக்குழந்தை ஒப்படைக்கப்படும்.  வெளிநாடுகளில் சகஜமாக பார்க்கப்படும் ‘சர்ரகஸி’ (Surrogacy) எனப்படும் கான்செப்ட், நம் நாட்டில் பெரும்பாலானோரால் விசித்திரமாக பார்க்கப்படுகறது. இதற்கு காரணம், வாடகைத் தாய் முறை பற்றிய புரிதல் இல்லாமையாக இருக்கலாம் என ஆங்காங்கே கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. 

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை..வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள்!

பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோனின் நடிப்பில கடந்த ஆண்டு  நெட்ப்ளிக்ஸில் வெளியான படம் மிமி, இப்படத்தில் இந்த சர்ரகஸி முறைப் பற்றி நன்கு விளக்கியிருப்பர்.  இந்த முறை மூலம் குழந்தை பெற்றவர்களின் லிஸ்டை இங்கே காண்போம்..

ஷாருகான்-கவுரிகான்:

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை..வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள்!

பாலிவுட் உலகின் முன்னனி கதாநாயகர்களுள் ஒருவராக விளங்கும் ஷாருகான். இவருடைய மனைவி கவுரிகானும் இவரும் இணைந்து 2013 ஆம் ஆண்டு தங்களது  மூன்றாவது மகனை வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்டனர். தனது குழந்தைக்கு ‘ஆப்ராம்’ என பெயரிட்டுள்ள ஷாருக், அது குறித்து ஒரு நேர்காணில் பேசுகையில்,  ஹிந்து-முஸ்லீம் குடும்பம் என்பதால் குழந்தைக்கு இவ்வாறு பெயர் வைத்துள்ளதாகவும், குழந்தைகளை பெயரளவில் கூட எந்த வித கருத்து வேறுபாடும் காட்டாமல் வளர்த்து வருவதாகவிம் அவர் கூறியிருந்தார். 

அமிர்கான்-கிரண் ராவ்:

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை..வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள்!

ரசிகர்களின் வரவேற்பை பெற்று சமீபத்தில் வெளிவந்த லால் சிங் சத்தா படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானும் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ்வும் 2011 ஆம் ஆண்டும் சர்ரகஸி முறை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர். கிரண் ராவ் கற்பமாக இருந்த  போது கருச்சிதைவு ஏற்பட்டதாலும் சில மருத்துவ சிக்கல்கள் ஏற்பட்டதாலும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. 

சன்னி லியோன்-டேனியல் வெப்பர்

பிரபல நடிகை சன்னி லியோன், 2011 ஆம் ஆண்டில் நடிகரும் பட இயக்குனருமான டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிஷா, நோவா, ஆஷர் என மூன்று முத்தான பிள்ளைகள் உள்ளனர். முதல் குழந்தையான நிஷாவை தத்தெடுத்துக் கொண்ட இவர்கள், நோவா மற்றும் ஆஷரை சர்ரகஸி மூலம் பெற்றுக்கொண்டதாக 2018 ஆம் ஆண்டில் தெரிவித்தனர். 

நீல் பாட்ரிக் ஹாரிஸ்-டேவிட் புரட்கா

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை..வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள்!

ஹாலிவுட் பிரபலங்களுள் ஒருவர் நீல் பாடரிக். ஆங்கில தொடரான ஹவ் ஐ மெட் யுவர் மதர் ஆகிய தொடர் மூலம் பல ரசிகர்களை பிடித்துள்ள இவர், அனிமேஷன் படமான ஸ்மர்ஃப்ஸ், சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படமான கான் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் டேவிட் புரட்கா என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தன் பாலின ஜோடியான இவர்கள், 2010 ஆம் ஆண்டில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஹார்பர் க்ரேஸ், கிடியன் ஸ்காட் என பெயரிட்டுள்ளனர். 

கரண் ஜோஹர்

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை..வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள்!

பாலிவுட் நிகழ்ச்சி தொகுப்பாளரும் இயக்குனருமான கரன் ஜோஹர். இவர், 2017ஆம் ஆண்டு வாடகைத் தாய் மூலம், யாஷ்-ரூஹி என்ற இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானார். சிங்கிள் பேரன்டாக குழந்தைகளை வளர்த்து வரும் அவர், தனக்கு வாழ்க்கைத் துணை இல்லாததைப் பற்றி கவலை பட்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ்

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை..வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள்!

இந்திய திரையுலகில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையுமே திரும்பி பார்க்க வைத்த ஜோடி, பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ். 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தங்களது பெண் குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைக்கு மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என பெயரிட்டுள்ள இவர்கள், அவ்வப்போது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK”2026 CM நான் தான்” EPS-க்கு விஜய் BYE! டார்கெட் உதயநிதிSeeman Angry on Vijayalakshmi |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
அதிமுக-காரன் பணத்துல சளைச்சவன் இல்ல.. தேர்தல்ல நாங்களும் பண்ணுவோம்! முன்னாள் அமைச்சர் பேச்சு
அதிமுக-காரன் பணத்துல சளைச்சவன் இல்ல.. தேர்தல்ல நாங்களும் பண்ணுவோம்! முன்னாள் அமைச்சர் பேச்சு
HBD MK Stalin: குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
Chennai Mini Bus: சென்னைவாசிகளே! 72 புதிய வழித்தடங்களில் இனி மினி பேருந்து - என்னென்ன ரூட்டு தெரியுமா?
Chennai Mini Bus: சென்னைவாசிகளே! 72 புதிய வழித்தடங்களில் இனி மினி பேருந்து - என்னென்ன ரூட்டு தெரியுமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
Embed widget