மேலும் அறிய

Kanguva: பாபி தியோலின் "அந்த" வீடியோ! கங்குவா படத்திற்குள் வந்தது இப்படித்தான்!

கங்குவா திரைப்படத்தில் உதிரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் பாபி தியோல் உள்ளே வந்தது எப்படி? என்று சிவா மனம் திறந்து பேசியுள்ளார்.

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

ரிலீசானது கங்குவா:

இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து. சிங்கப்பூர். மலேசியா, தாய்லாந்து, என பல நாடுகளில் கங்குவா படம் வெளியாகியுள்ளது. சுமார் 14 ஆயிரம் திரையரங்கில் வெளியாகியுள்ள இந்த படத்தை காண்பதற்காக காலை முதலே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் வில்லனாக உதிரன் என்ற கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்துள்ளார். அனிமல் படத்தில் வில்லனாக நடித்த இவரது நடிப்பிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் தென்னிந்தியாவில் உருவாகினர்.

பாபி தியோல் உதிரனாக மாறியது எப்படி?

இந்த நிலையில், கங்குவா படத்தில் பாபி தியோல் வந்தது எப்படி? என்பது குறித்து இயக்குனர் சிவா மனம் திறந்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் சிவா கூறியிருப்பதாவது, “ நான் சிறு வயதில் பாபி தியோலின் குப்த்,. சோல்ஜர் போன்ற அவரின் படங்களை பார்த்துள்ளேன். அவரது படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.

நான் இன்ஸ்டாகிராமில் ஒரு சிறிய வீடியோ க்ளிப் பார்த்தேன். அவர் விமான நிலையத்தில் காரில் இருந்து இறங்கி வெளியே வருவார். அது என்னை மிகவும் கவர்ந்தது. அதுவே என்னை அவரை தேர்வு செய்ய வைத்தது. நான் என்னுடைய உதிரனுக்காக காத்திருந்தேன். அதை பாபி சார் இந்த படத்தில் செய்துள்ளார். உதிரன் இரக்கம் இல்லாத ஒருவன். அனிமல் படத்தில் மிருகமாக இருந்தவர். இந்த படத்தில் காட்டு மிருகமாக உள்ளார்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தென்னிந்தியாவில் தொடரும் பாபி தியோல் ஆதிக்கம்:

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு வெளியாக உள்ள கங்குவா மற்ற மாநிலங்களில், வெளிநாடுகளில் அதிகாலையே வெளியாகிவிட்டது. கங்குவா படத்தை அங்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 55 வயதான பாபி தியோல் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ஆவார். 1995ம் ஆண்டு முதல் நடித்து வரும் பாபி தியோல் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கங்குவா படம் மட்டுமின்றி தமிழில் விஜய் நடிக்கும் படத்திலும் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார்.  மேலும், பவன் கல்யாண் மற்றும் பாலய்யா படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget