![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch video: டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா - ஜோதிகா... ஜோடியாக ஒர்க் அவுட்... வைரலாகும் வீடியோ!
Watch video : நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
![Watch video: டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா - ஜோதிகா... ஜோடியாக ஒர்க் அவுட்... வைரலாகும் வீடியோ! Suriya Jyothika together workout video goes viral Watch video: டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா - ஜோதிகா... ஜோடியாக ஒர்க் அவுட்... வைரலாகும் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/02/16f03d03055e15fc331ef74d44a7ff331712079603728224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் மிகவும் கியூட் ஜோடிகளின் ஒருவர் சூர்யா - ஜோதிகா தம்பதி. 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படத்தில் இணைந்து நடித்த இவர்கள் இருவர் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி 2006 திருமணத்தில் கைகூடியது. இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து கொள்வதற்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட நடிகை ஜோதிகா , 2015ம் ஆண்டு வெளியான '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து நல்ல திரைக்கதை கொண்ட சவாலான கதாபாத்திரங்களாக மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஜோதிகா சமீப காலமாக ஃபிட்னெஸ் மீது மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். அந்த வகையில் அவரின் பல ஒர்க் அவுட் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.
நடிகர் சூர்யா தன்னுடைய ஃபிட்னெஸ் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தன்னுடைய உடலை என்றுமே ஃபிட்டாக வைத்திருப்பவர். தற்போது நடிகை ஜோதிகா கணவர் சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஒர்க் அவுட்களை செய்யும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
45 வயது நிரம்பிய ஜோதிகா மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி ஜோடியாக "காதல் தி கோர்" படத்தில் நடித்த பிறகு அவரின் மார்க்கெட் எகிறி பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார். அஜய் தேவ்கன் ஜோடியாக "ஷைத்தான்" திரில்லர் படத்தில் நடித்திருந்தார். தற்போது 'சர்ஃபிரா' படத்தில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
மும்பையில் செட்டிலாகி உள்ள சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி இருவரும் இணைந்து ஒன்றாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் ஸ்பீடுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மிகவும் கடுமையாக ஒர்க் அவுட் செய்கிறார் ஜோதிகா. இதை பார்த்த அவர்களின் ரசிகர்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)