ஆம்பள மாதிரி இருக்காங்க... பூஜா ஹெக்டே மீது ஏன் இவ்வளவு வன்மம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாவின் ரெட்ரோ படத்தின் டீசர் வெளியாகியதைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டேவை நெட்டிசன்கள் உருவகேலி செய்து வருகிறார்கள்
பூஜா ஹெக்டே
மிஸ்கின் இயக்கிய மூகமூடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அடுத்தடுத்து தெலுங்கில் படங்களில் நடித்த பூஜா ஹெக்டே தெலுங்கு ரசிகர்களிடையே பிரபலமானார். அல்லு அர்ஜூன் நடித்த ஆலா வைகுந்தபுரமுலோ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனம் பான் இந்திய அளவில் ஹிட் அடித்தது. தொடர்ந்து தமிழில் விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அரேபிக் குத்து பாடலும் பெரியளவில் ஹிட் அடித்தது.
அடுத்தபடியாக விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகியது. டீசர் வெளியானதைத் தொடர்ந்து பூஜா ஹெக்டேவை சமூக வலைதளங்களில் உருவ கேலி செய்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.
ஆம்பள மாதிரி இருக்காரு
பூஜா ஹெக்டே நடித்த பெரும்பாலான படங்களில் அவருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. கிளாமர் நடிகையாக பரவலாக அறியப்பட்ட பூஜா ஹெக்டே ரெட்ரோ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது இந்த டீசரில் தெரியவந்துள்ளது. இந்த டீசர் வெளியாகி ஒருபக்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இன்னொரு பக்கம் பூஜா ஹெக்டேவை உருவகேலியும் செய்து வருகிறார்கள் ஒரு தரப்பினர்.
Pooja Hegde Face https://t.co/IwtOetGrcQ pic.twitter.com/DJcUgdYPoB
— Navyanth 💲 (@Navyanth_17) December 26, 2024
பூஜா ஹெக்டே பார்க்க நடிகர் வையாபுரி பெண் வேடம் போட்ட மாதிரி இருக்கிறார் என்றும் அவர் பார்க்க ஆண் மாதிரி இருக்கிறார் என்று பலர் சமூக வலைதளங்களில் அவரை வைத்து மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் பூஜா ஹெக்டேவிற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
Pooja Hegde entra ila undhi 😭😭
— Dinnu (@DinnuRedD) December 26, 2024
Same feeling ochindi #Retro Teaser chuste#PoojaHegde pic.twitter.com/J41ncyhAQC
Vaiyapuri ah order panra alavuka kaanju poi irukeenga https://t.co/llrJAmAqK7
— Kakashi Man 💮 (@SBR_offl) December 25, 2024
சிறுநீரக பையில் புற்றுநோய்...ஷிவராஜ்குமார் மருத்துவர் வெளியிட்ட வீடியோ