Rajinikanth: ‘மனைவியின் அன்பால் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டேன்’ .. ரஜினி சொன்ன மோட்டிவேஷனல் ஸ்டோரி..!
தீவீர குடுப்பழக்கம் இருந்தவர் ரஜினிகாந்த் அதிலிருந்து தனது மனைவி லதா எப்படி தன்னை மீட்டெடுக்க உதவினார் என்று கூறியுள்ளார்
ஒரு பஸ் கண்டக்டராக இருந்து இன்று சூப்பர்ஸ்டாராக கொண்டாடப் படுகிறார் ரஜினிகாந்த். பெரிய அளவிலான பின்னணி ஏதும் இல்லாமல் தனது உழைப்பினால் மட்டுமே இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார். அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான போராட்டம் என்றால் தீவிர குடி பழக்கத்தில் இருந்து அவர் வெளியே வந்த காலம் தான். ரஜினியின் இந்த பயணம் பலருக்கு இன்று நம்பிக்கை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ரஜினி
கண்டக்டராக தான் இருந்த சமயத்தில் இருந்தே புகைப்பிடிப்பது , மது அருந்துவது அசைவ உணவுகளை சாப்பிடுவதை அன்றாடமாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். சினிமாவில் மிகப்பெரிய நடிகராக அவர் உருவான பிறகும் இந்தப் பழக்கம் அவரை விட்டு போகவில்லை. இந்தப் பழக்கத்தில் இருந்து அவரை விடுவித்தவர் அவரது மனைவியான லதா ரஜினிகாந்த் தான்.
தனது அன்பினால் என்னை மீட்டார்
ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ”நான் கண்டக்ராக இருந்தபோது சில தகாத நண்பர்களின் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. தினமும் மது அருந்தும் வழக்கம் எனக்கிருந்தது. இரண்டு நாட்களுக்கு ஒரு இறைச்சி சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது. நான் பிடித்த சிகரெட்களுக்கு எண்ணிக்கையே கிடையாது. கண்டக்டராக இருந்தபோதே இந்த நிலமை என்றால் ஒரு நடிகனாக புகழும் பணமும் சேர்ந்தப்பின் எந்த அளவிற்கு இருந்திருப்பேன் என்று சிந்தித்துப் பாருங்கள். இறைச்சி , மது, புகைப்பிடிப்பது. இந்த மூன்றும் மிக மோசமான ஒரு கலவை. இந்த மூன்றையும் அதிகளவில் உட்கொண்டவர்கள் தங்களது வாழ்நாளில் 60 வயதிற்கு மேல் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை. அப்படியான நிறைய நபர்களை எனக்குத் தெரியும் . நான் அவற்றைப் பற்றி பேச விரும்பவில்லை.
சைவ உணவை வெறுத்தேன்
தினமும் காலையில் எனக்கு ஆட்டுக்கால் பாயாவும் ஆப்பமும் வேண்டும். இறைச்சி இல்லாத உணவை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சைவ உணவு சாப்பிடுபவர்களை நான் இளக்காரமாக பார்த்தேன். இந்த மன நிலையில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்தவர் எனது மனைவி தான் இப்போது எனக்கு வயது 72 ஆகிறது. நான் இவ்வளவு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு காரணம் எனது மனைவி லதா தான். லதாவை எனக்கு முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர் வை ஜி மகேந்திரன் தான். அவருக்குத்தான் தான் எனது நன்றியை சொல்ல வேண்டும். தனது அன்பினாலும் தகுதியான மருத்துவர்களின் வழியாக அவர் என்னை குனப்படுத்தினார். என்று தனது வாழ்க்கையின் மிக சவாலான காலக்கட்டத்தைப் பற்றி கூறியிருக்கிறார் ரஜினி.
ஜெயிலர்
அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து நெல்சன் இயக்கியிருக்கும் படம் ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.