மேலும் அறிய

Jailer 2 Trailer: "தலைவரு நிரந்தரம்.." நாளை ரிலீசாகிறது ஜெயிலர் 2 ட்ரெயிலர்! ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2. கடந்த 2022ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, ஜெயிலர் 2 படம் உருவாகியுள்ளது.

நாளை ட்ரெயிலர் ரிலீஸ்:

இந்த படம் சரஸ்வதி பூஜை கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் ட்ரெயிலர் நாளை வெளியாகிறது. இதனால், ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயிலர் 2 படத்தை முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜெயிலர் 2 படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே அமையும். ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 

நட்சத்திர பட்டாளம்:

இந்த படத்தில் மிதுன் சக்கரபோர்த்தி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகிபாபு, மிர்ணா, ரித்விக், ஜதின் சர்மா, பகவதி பெருமாள், கோட்டயம் நசீர், சுனில் சுகதா, சுஜித் சங்கர், ஹக்கீம் ஷாஜகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள மோகன்லால், சிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இந்த பாகத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி ஆகியோர் இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

பட்ஜெட்:

இந்த படத்தின் பட்ஜெட் ரூபாய் 250 கோடி முதல் ரூபாய் 350 கோடி வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.நிர்மல் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பான் இந்தியா:

இந்த ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டிற்காக நடிகர் தனுஷின் ஓம் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால், ஜெயிலர் 2 படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது. 

சமீபத்தில் வெளியான பாரடைஸ், டாக்சிக் படங்கள் பான் இந்தியா அளவில் வெளியாகி படுதோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில், மீ்ண்டும் பான் இந்தியா படமாக ஜெயிலர் 2 படம் வெளியாகிறது. இதனால், இந்த படம் வெற்றி பெற்றால் பான் இந்தியா படங்கள் தொடர்ந்து இந்திய திரைப்பட சந்தையில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Ajith:
Ajith: "ஒருநாள் உங்களைப் பெருமைப்பட வைப்பேன்.." ரசிகர்களுக்கு அஜித் உருக்கமான சத்தியம்!
Jailer 2: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்..! 600 கோடி கல்லா கட்டியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் ஜெயிலர் 2
Jailer 2: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்..! 600 கோடி கல்லா கட்டியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் ஜெயிலர் 2
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
அரிசி வாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.. இப்போது இது தேவையா? - தவெக அரசை தோலுரித்த சீமான்
அரிசி வாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.. இப்போது இது தேவையா? - தவெக அரசை தோலுரித்த சீமான்
ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைத்து கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளி.. காற்றில் பறந்த உத்தரவு - அரசின் நடவடிக்கை என்ன?
ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைத்து கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளி.. காற்றில் பறந்த உத்தரவு - அரசின் நடவடிக்கை என்ன?
Embed widget