‛ரூ.20 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவால கூட்டம் கூட்ட முடியல’ இயக்குனர் சுந்தர் சி அட்டாக்!
இப்படியே எல்லாரையும் நீங்கள் நிராகரித்தால் கடைசியில் நான் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றேன். அதற்கு ரவிச்சந்திரன் சார், நீங்க நடிங்க சார், நான் உங்களைவைத்து தயாரிக்கிறேன் என்றார்.
Sundar. C : "நான் ஹீரோவான காரணம் இதுதான்..."ரகசியத்தை உடைத்த சுந்தர். சி
தமிழ் சினிமா கண்ட பன்முக வித்தகர்களில் ஒருவர் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல அடையாளங்களை கொண்ட சுந்தர். சி. முன்னணி நடிகர்கள் பலரையும் இயக்கிய பெருமை இவரை சேரும்.
மாஸ் ஹீரோக்களை இயற்றிய இயக்குனர்:
இயக்குனர் மற்றும் நடிகருமான மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். 1995ம் ஆண்டு வெளியான நகைச்சுவை கலந்த திரைப்படமான "முறை மாமன்" மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிறகு தொடர்ந்து பல படங்களை இயக்கினார். சூப்பர் ஸ்டாரை வைத்து அருணாச்சலம், உலக நாயகனை வைத்து அன்பே சிவம், மற்றும் மேட்டுக்குடி, முறை மாப்பிளை, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
நடிகர்களின் அட்டுழியம்:
ஒரு கட்டத்தில் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த சுந்தர்.சி "தலை நகரம் " திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானர். ஒரு பேட்டியின் போது சுந்தர். சி நடிப்பின் மீது ஆர்வம் காட்டியதற்கு காரணம் குறித்து கேட்ட போது பளார் என்ற ஒரு பதிலை கூறியிருக்கிறார்". நடிகர் ஒருவர் படத்தில் நடிப்பதற்கு 10 கோடி, 20 கோடி கேட்கிறார்கள். அவர்கள் அதற்கு படத்திற்கு தேவையான ஓப்பனிங் கொடுக்க வேண்டும். ஒரு நான்கு நாட்களாவது திரைப்படத்திற்கு ரசிகர்களை கொண்டு வரவேண்டும். அதற்கு பிறகு படத்தின் திரைக்கதையே அதை பார்த்து கொள்ளும். இந்த ஹீரோக்கள் பண்ற அட்டுழியம் இருக்கே அதிலும் சிலரால் ஒரு நாள் கூட அந்த கூட்டத்தை வர வைக்க முடியாதபோது அவர்களுக்கு அத்தனை கோடி கொட்டிக்கொடுப்பதை விட நம்மளே நடித்து விடலாம்" என்று தோன்றியது என்றார்.
View this post on Instagram
நடிக்க வந்த காரணம் :
"தலைநகரம்" படத்தை நான் தயாரிக்கும் போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் பல ஹீரோக்களையும் தவிர்த்து வந்தார். அப்போது இப்படியே எல்லாரையும் நீங்கள் நிராகரித்தால் கடைசியில் நான் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றேன். அதற்கு ரவிச்சந்திரன் நீங்க நடிங்க சார், நான் உங்களைவைத்து தயாரிக்கிறேன் என்று கூறியதன் மூலம் வந்த வாய்ப்பு தான் அது" என்றார் சுந்தர் சி. அவர் பேட்டியின் போது பேசிய வீடியோ கிளிப்பிங் இங்கே:
மேலும் யாராக இருந்தாலும் மற்றுமொரு ஆப்ஷன் வைத்து கொள்வது நல்லது தான். அது உங்களை ரொட்டேஷனில் வைத்து கொள்ளும். என்னை பொருத்த வரைக்கும் "மாஸ்டர் அப் ஒன்னாக இருப்பதை விடவும் ஜாக் அப் லிட்டில் திங்ஸ்ஸாக இருக்கலாம்"என்றார் சுந்தர். சி .