ஜெயிலர் 2 மேக்கிங் வீடியோ வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் பாடல் மேக்கிங் வீடியோவை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது

ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடலான அல்ல போலேலோ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து இந்த நிலையில் இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் ரஜினி கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் , மிர்னா மேனன் , மோகன்லால் , ஷிவராஜ்குமார் , யோகிபாபு , பூர்ணா, வித்யா பாலன் , விஜய் சேதுபதி , எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 15 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் பகுதியாக சமீபத்தில் படத்தின் முதல் பாடலான அல்ல போலேலோ என்கிற பாடல் வெளியானது . பூர்ணா இந்த பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு
ஜெயிலர் முதல் பாகத்தில் காவாலா பாடலைப் போல அல்ல போலேலோ இந்த பாடலும் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது . ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Here’s the making of #AlaBolelo!🪘 #Jailer2
— Sun Pictures (@sunpictures) August 25, 2026
Watch #AlaBolelo Lyric Video
▶️ https://t.co/SX7Y0lRLlt@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @shamna_kkasim @arunrajakamaraj @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren… pic.twitter.com/4XsRN5Th01
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















