மேலும் அறிய

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தந்தை.. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகன் - ஆவடியில் அதிர்ச்சி..!

சென்னை ஆவடி அருகே செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பொறியியல் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஆவடி அருகே செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பொறியியல் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செல்போனில் கேம்:

ஆவடி அடுத்த விவேகானந்தா நகர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் தினேஷ் குமார் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மாணவரின் தந்தை குருமூர்த்தி மகனை கண்டித்துள்ளார்.

தற்கொலை:

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு படுக்கையறைக்கு தூங்க சென்ற தினேஷ் மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்து வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குருமூர்த்தி மகனை அழைப்பதற்காக அறைக்குள் சென்றுள்ளார். அப்போது மகன் மின் விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆவடி போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ததுடன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விளையாட்டிற்கு அடிமை:

முன்னதாக திருச்சி அருகே செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்த சந்தாபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் திருச்சி பருப்புகார தெருவில் இனிப்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பாலஹரிநாத், காட்டூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி திறக்காத நிலையில், வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் செல்போனில் பப்ஜி கேம் டவுன்லோட் செய்து விளையாடி வந்துள்ளார். இதனால் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாததால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆன்லைன் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், படிப்பதற்காக கொடுக்கப்பட்ட 5 ஜிபி டேட்டாவை ஒரே நாளில் விளையாடி  தீர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை அவரை கடுமையாக கடிந்து கொண்டார். 

குடும்பத்தினர் அதிர்ச்சி:

இதனால் மனமுடைந்த பாலஹரிநாத், தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அவரது அக்கா கதவை தட்டியுள்ளார். அவர் பதில் அளிக்காததால், கதவை உடைத்துச்சென்று உள்ளே பார்த்தபோது, பால ஹரிநாத் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget