SS Rajamouli : பாகுபலி படம் இத்தனை படங்களின் காப்பியா...வீடியோவுடன் வெளியான ட்விட்டர் பதிவு
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற படம் பாகுபலி.
ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் குறித்த ட்விட்டர் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற படம் பாகுபலி. மரகதமணி இசையமைத்திருந்த இப்படம் Baahubali: The Beginning, Baahubali 2: The Conclusion என்ற இரு பாகங்களாக வெளியாகியிருந்தது. கிட்டதட்ட ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இதன் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் பேன் இந்தியா படமாக வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.
If, it would had done by @Atlee_dir 🙄pic.twitter.com/X32rxk27qI
— × റോബിൻ ⱼD × 🕊 (@PeaceBrwVJ) September 2, 2022
முதல் பாகம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து 2017 ஆம் ஆண்டு பாகுபலி-2 வெளியானது. முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற கேள்வியும், மகிழ்மதி மீண்டும் மகேந்திர பாகுபலியின் கைக்கு சென்றதா? என்ற எதிர்பாப்பும் 2 பாகத்தையும் வெற்றி பெற வைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது. இன்றளவும் பாகுபலி படத்தின் பிரமாண்டத்தை மிஞ்ச எந்த படமும் இல்லை என்னும் அளவுக்கு இந்திய சினிமாவே பெருமை கொண்டது.
I like the effort that went down to pick similarities from other movies & edit it side by side with Bahubali 2. While watching the movie I got a feel that this has been done already of course. Wonderwoman though is from 2017 same as Bahu 2, so not sure about that being copied https://t.co/Vvq3pPlSTX
— HaRLeY QUiNN (@GeeThatsMee666) September 2, 2022
ஆனால் பாகுபலி படம் குறித்த ட்விட்டர் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. அதில் அப்படத்தின் காட்சிகள் பிரபல ஹாலிவுட் படங்களின் காட்சிகளை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படத்தின் 35 காட்சிகள், ஹாலிவுட் படங்களான அவதார், 300, அவெஞ்சர்ஸ், எக்ஸ் மேன், தி மைத், கிங் காங், ஹெர்குலஸ், பேட்மேன் vs ஸ்பைடர்மேன், காட் ஆஃப் வார் 3, ஹல்க், அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான், தார் தி டார்க் வேர்ல்ட், தி லயன் கிங், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட பல படங்களின் காட்சிகளை ஒத்துப்போகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் தாங்கள் படத்தின் படங்களின் தாக்கத்தால் அந்த காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ராஜமௌலிக்கு சப்போர்ட் செய்த நிலையில், இன்னொரு பக்கம் இதே நம்ம இயக்குநர் அட்லி எடுத்திருந்தால் என்னவெல்லாம் சொல்லிருப்பார்கள் என சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.