இந்தியன் 2 வேலைக்கு ஆகாது; ரூட்டை மாற்றும் அனிருத் - ஷங்கர் கூட்டணி!
இந்தியன் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இருந்த இயக்குநர் ஷங்கர் அதில் ஏற்ப்பட்ட பிரச்சனைகள் காரணமாக படத்தை கிடப்பில் போட்டுள்ளார். இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் சரணை வைத்து மாஸ் ஆக்ஷன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக தலவல்கள் வெளியாகியுள்ளது.
![இந்தியன் 2 வேலைக்கு ஆகாது; ரூட்டை மாற்றும் அனிருத் - ஷங்கர் கூட்டணி! south indian famous director shankar and anirudh join hands again for telugu movie இந்தியன் 2 வேலைக்கு ஆகாது; ரூட்டை மாற்றும் அனிருத் - ஷங்கர் கூட்டணி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/21/ed25274555dc4a650517aeb45d670b2b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திரைத்துறையில் இளம் இசையமைப்பாளராக களமிறங்கி, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் அனிருத் .” ராக் ஸ்டார் ” என கொண்டாடப்படும் அனிருத் , தனுஷ் நடிப்பில் உருவான “3” என்ற திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் பயணத்தை தொடங்கினார். தவிற இவர் வெளியிட்ட “எனக்கென யாரும் இல்லையே “, “சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல” போன்ற ஆல்பம் பாடல்களும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தன. இன்று பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் என பல பிரபலங்களில் படத்திற்கு இவர் இசைதான். ரஜினி,கமல், அஜித், விஜய் போன்ற பல நட்சத்திரங்களின் படங்களுக்கு குறுகிய காலத்தில் இசையமைத்து வெற்றியை கைப்பற்றியவர். இன்று கொண்டாட்டங்கள் என்றால் பட்டி தொட்டி எங்கும் ராக் ஸ்டார் பாடல்கள்தான். ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த அனிருத் பல விருதுகளையும் குவித்துள்ளார். சிறந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளருக்கான தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் , சிறந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளருக்கான தென்னிந்திய சர்வதேச பட விருதுகள் ,எடிசன் விருதுகள், விஜய் அவார்ட்ஸ், ஆனந்த விகடன் விருதுகள், மிர்ச்சி தென்னிந்திய விருதுகள் என பல விருதுகளை பெற்றுள்ளார்.
அனிருத் தற்பொழுது சிவக்கார்த்திகேயனின் டாக்டர், விஜய் சேதுபதி, சமந்தா- நயன்தாரா ஆகியோரது நடிப்பில் உருவாகிவரும் “காத்துவாக்குல ரெண்டு காதல் “ , கமல்ஹாசன் நடிப்பில் ” இந்தியன் 2” ,விஜய் 65 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தியன் 2 படங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் ஷங்கருடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இருந்த இயக்குநர் ஷங்கர் அதில் ஏற்ப்பட்ட பிரச்சனைகள் காரணமாக படத்தை கிடப்பில் போட்டுள்ளார். இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் சரணை வைத்து மாஸ் ஆக்ஷன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக தலவல்கள் வெளியாகியுள்ளன.
அனிருத் இசையில் தயாராகிவரும் காத்து வாக்குல ரெண்டு படத்தின் “ரெண்டு காதல் “ என்ற சிங்கிள் ட்ராக்கினை கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டிருந்த நிலையில், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து வருகிற ஜூலை மாதம் படத்தின் மற்றொரு பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இது குறித்த தகவலை தயாரிப்பாளரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)