மேலும் அறிய

Garudan Box Office : ஸ்டார் படத்தின் வசூலை முந்திய சூரி.. கருடன் படம் வசூல் நிலவரம்

சூரி நடித்துள்ள கருடன் படத்தின் வசூல் கவின் நடித்த ஸ்டார் படத்தின் வசூலைக் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கருடன்

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமான சூரி தற்போது நடித்துள்ள படம் கருடன் . துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார் , உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . விடுதலை படத்தில் வெற்றிமாறனின் அப்பாவியான கதிரேசன் என்கிற கதாநாயகனாக நடித்த சூரிக்கு மக்கள் சார்பில் நல்ல ஆதரவு கிடைத்தது.

இந்த முறை சூரி ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படம் கருடன். கடந்த மே 31 ஆம் தேதி வெளியாகிய கருடன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் செம பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. முதல் நாளில் படத்திற்கு கிடைத்த சாதகமான விமர்சனங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் மக்களில் வரவு அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் கருடன் படத்தின் முதல் முன்று நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. 

கருடன் படத்தின் வசூல் நிலவரம்

கருடன் படம் முதல் நாளில் உலகளவில் 4.2 கோடி வசூலித்தது. இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகப்படியான வசூல் ஈட்டிய படங்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது கருடன்.  கேப்டன் மில்லர் , கில்லி , அரண்மனை 4 முதலிய படங்களுக்கு அடுத்து நான்காவது இடத்தில் கருடன் உள்ளது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் படத்திற்கு மக்களை ஈர்த்துள்ளது. 

அதன்படி இரண்டாவது நாளில் கருடன் படம் ரூ 5.65 கோடி, மூன்றாவது நாளில் உலகளவில் ரூ 7.35 கோடி வசூலித்தது.  மொத்தமாக முதல் மூன்று  நாட்களில் கருடன் படம் 16.8 கோடி வசூலித்து இந்த ஆண்டில் முதல் வாரத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது .

இதனைத் தொடர்ந்து நான்காவது நாளில் 2.75 கோடி , ஐந்தாவது நாளில் 2.35 கோடி , ஆறாவது நாளில் 1.80 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. மொத்தமாக முதல் ஆறு நாட்களில் கருடன் படம் 21,50 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

கருடன் படத்தின் முதல் ஆறு நாட்கள் வசூல் கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் வசூலை முறியடித்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள் . மேலும் ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்ததல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற காரணத்தினால் படத்தின் வசூலில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்து வரக்கூடிய வாரங்களில் வசூல் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் வசூல்  குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Headlines:அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
TN Headlines: அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Kamalhaasan:
Kamalhaasan: "கல்கி படத்திற்கு ஓகே சொல்ல ஒன்றரை வருடம் யோசித்த கமல்" இதுதான் காரணம்!
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Headlines:அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
TN Headlines: அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Kamalhaasan:
Kamalhaasan: "கல்கி படத்திற்கு ஓகே சொல்ல ஒன்றரை வருடம் யோசித்த கமல்" இதுதான் காரணம்!
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Indian 2: உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
Embed widget